பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது 6-வது தவணையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. உங்களுக்குப் பணம் வரவில்லை எனில், பின் வரும் உதவி எண்கள் மூலம் இதற்கான விவரங்களை தெரிந்துகொள்ள மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா
பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana ) திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு 6000 ரூபாய் மத்திய அரசு வழங்கி வருகிறது . இந்த தொகையானது ஆண்டுக்கு மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே 5 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் இதன் 6-வது தவணை கடந்த 1-ம் தேதி முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்த தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தில் சுமார் 14 கோடி விவசாயிகளைச் சேர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால், பிரதமர்-கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேலும் தாமதமின்றி பதிவு செய்யலாம். நீங்கள் இந்த திட்டத்தில் இணையப் பிரதமர் சம்மன் நிதி யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடலாம் - https://pmkisan.gov.in/
நீங்கள் PM-Kisan பணத்தைப் பெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் PM-Kisan திட்டத்திற்கு விண்ணப்பித்து உங்களுக்கு ஆறாவது தவணை கிடைக்கவில்லை என்றால், உங்களின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசு சில உதவி எண்களை அறிவித்துள்ளது.
-
PM-Kisan Helpline: 155261 அல்லது 1800115526 என்ற கட்டணம் இல்லா எண்ணிற்கு அழைக்கலாம்
-
இது தவிர, வேளாண் அமைச்சகத்தின் 011-23381092 இந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்
-
உங்கள் மாவட்ட வேளாண் அலுவலர் அல்லது கணக்காளரையும் தொடர்பு கொள்ளலாம்.
pmkisan-ict@gov.in-க்கு மின்னஞ்சல் செய்யலாம்
PM-Kisan புதிய பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று Farmers Corner-ல், beneficiary list என்பதை கிளிக் செய்க. தேவையான விவரங்களை நிரப்பவும், நீங்கள் பட்டியலைப் பெறுவீர்கள்.
PM-Kisan பட்டியலை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும் படிக்க...
பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
LIC வழங்கும் குறைந்த EMI-யில் வீட்டுக்கடன் திட்டம்! 6.90% வட்டி மட்டுமே!!
குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!
Share your comments