மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. கால்நடைகளில் மாடு, ஆடு, மீன் என விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கால்நடைகளை வளர்ப்பதற்கு அரசே மானியம் வழங்குகிறது. அந்த வகையில் தமிழக அரசு, ஆடு வளர்ப்பதற்கு வழங்கக் கூடிய 90% மானியத் திட்டத்தைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.
ஆடு வளர்ப்பு மானியம் மூலம் யாரெல்லாம் பயன் பெறலாம், இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் என்னென்ன, திட்டத்தின் பயன்கள் என்ன, எவ்வாறு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் போன்ற முழு விவரங்களை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக இக்காலக்கட்டத்தில் ஆட்டின் இறைச்சி அதிகமாகத் தேவைப்பட்டு வருகின்ற, இந்த சூழலில் ஆடுகளின் எண்ணிக்கையை, குறிப்பாகச் செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக ஊரகப் புறக்கடை செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க: அமெரிக்கா பேங்க license-ஆ கேன்சல் பன்னுங்க: King Maker காமராஜ்
இந்த திட்டமானது வறட்சி மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கும், தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மானியம்
ஆடு வளர்ப்புக்கு மத்திய அரசு 60% மானியம் வழங்கி வருகின்றது. அதோடு, தமிழக அரசு 30% மானியம் வழங்குகிறது. எஞ்சிய 10% சதவீத தொகையைப் பயனாளிகள் தங்களிடமிருந்து கொடுத்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் பயன்பெறலாம்
இத்திட்டத்தின் கீழ் நிலமற்ற விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். மேலும் சிறு, குறு விவசாயிகள், வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள், மாற்று திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவன் இறந்த பெண்கள், ஆதரவற்ற பெண்கள் என இத்தரப்பு மக்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
திட்டத்தின் பயன்
இந்த திட்டத்தின் கீழ் 4 முதல் 5 மாத வயதுடைய 10 செம்மறி ஆடுகள் வழங்கப்படுகின்றன. அல்லது 5 முதல் 6 மாத வயதுடைய வெள்ளாடுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் இனப்பெருக்கத்திற்கு என ஒரு கிடாயும் வழங்கப்படுகிறது. இந்த இரு வகையில் ஏதேனும் ஒரு வகை ஆடுகள் பயனாளிக்கு வழங்கப்படும்.
திட்டத்தின் முறை
பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஆடுகளுக்கும் சுமார் 3 வருடங்களுக்குக் காப்பீடு செய்து கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடாய் ஆடுகளை ஒரு வருடமும், பெட்டை ஆடுகளை 3 வருடங்களும் என அந்த கால அளவுக்குள் விற்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட கால அளவுக்குள் ஆடுகளை விற்கக் கூடாது என பயனாளிகளிடம் ஒப்பந்தப் படிவமும் பெற்றுக் கொள்ளப்படும்.
இந்த திட்டத்தின்கீழ் பயனாளிகளே நேரில் சென்று தங்களுக்கு விருப்பமான ஆடுகளைத் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
தேவையான சான்றுகள்
ஆதார் கார்டு
நேஷன் கார்டு
வருமானச் சான்று
இருப்பிடச் சான்று
புகைப்படம் 2
(குறிப்பு: இவற்றின் நகல்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்)
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!
மக்களே உஷார்! சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!
Share your comments