நீர் வள நில வள திட்டம் மூலம் விவசாய நிலங்களுக்கு வரும் தண்ணீர் பரிசோதனை செய்யப்படும். விவசாய நிலங்களின் மண் பரிசோதனை செய்யப்படும். இச்செயல்பாடுகள் மூலம் விவசாய நிலங்கள் அதிகம் விளைச்சலைத் தரும் நிலங்களாக மாற்றப்படும். இதன் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் சரிவரப் பெற வேண்டிப் பல செயல்பாடுகள் செயல்படுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் உங்கள் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கும் கால்வாய்கள், நீர் வள இடங்களை அதாவது அருகில் உள்ள அணைகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் என அனைத்து நீர் வழங்கும் இடங்களைத் தூர்வாரி விவசாய நிலங்களுக்கு நீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதோடு நீரினைச் சேமிக்கவும் செயல்பாடுகள் செய்யப்பட உள்ளது. சொட்டு நீர் பாசனம் முறையும் அதிகமாகச் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், தோட்டக்கலைப் பயிர் செயல்விளக்கம், பூச்சிக்கொல்லி இல்லாத காய்கறி உற்பத்தியை ஊக்குவித்தல், நண்ணீர் பாசனத்தை ஊக்குவித்தல், பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் தட்பவெப்ப நிலையைத் தாங்கும் தொழில்நுட்பம் ஆகிய புதுமையான செயல்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
பயனைப் பெற தகுதி
சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் தகுதியானவர்கள்.
குத்தகைக்கு இருந்தால், திட்ட அடிப்படையில் குத்தகை காலம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட சாகுபடி, பரப்பளவு விரிவாக்கம் போன்ற கூறுகளுக்கு நீர் பயன்பாடு கட்டாயமாக இருக்கும் இடங்களில் உறுதி செய்யப்பட்ட நீர்ப்பாசன வசதிகள் அவசியம்.
பயனைப் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் அனைத்துக் கட்டாய ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
ஆவணங்கள் தற்போதைய காலத்திற்கு செல்லுபடி ஆகக் கூடியதாக இருக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
விண்ணப்ப படிவம்
பயனாளி HORTNET இல் பதிவு செய்திருக்க வேண்டும்
நிலத்தின் சிட்டா மற்றும் அடங்கல் (அசல்) வைத்திருக்க வேண்டும்.
FMB ஸ்கெட்ச்.
ஆதார்
குத்தகை விவசாயிகளாக இருந்தால், பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும்.
சாகுபடி தொடர்பான கூறுகளுக்கான மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கைகள்
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (மூன்று)
ரேஷன் கார்டு (ஜெராக்ஸ்)
கணக்கு எண்ணைச் சரிபார்க்க வங்கி பாஸ்புக் (1வது பக்கம் ஜெராக்ஸ்).
உதவித்தொகை ரூ.50,000/-க்கு மேல் இருக்கும் கூறுகளுக்கான உறுதிமொழி
பயனாளியுடன் செயல்படுத்தும் பல்வேறு கட்டங்களில் களப் புகைப்படங்கள் (பகுதி விரிவாக்கம் மற்றும் திட்ட அடிப்படையிலான செயல்பாடுகளுக்கு)
NHM லோகோவுடன் ஃபீல்ட் போர்டு முடிவு (திட்ட அடிப்படையில்)
விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.15,000 மானியம்!
விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! 90% மானியத்துடன் மத்திய அரசு திட்டம்!
Share your comments