சேலம் மாவட்ட அங்கக விவசாயிகளின் கவனத்திற்கு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Collector's important announcement to Salem district farmers

சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்ய உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அங்கக விவசாய திட்டமானது 2023-24 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 500 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

2023-24- ஆம் ஆண்டில் ஆத்தூர் 40 ஹெக்டர், பெத்தநாயக்கன்பாளையம், 60 ஹெக்டர், ஏற்காடு 40 ஹெக்டர், காடையாம்பட்டி 60 ஹெக்டர், மேச்சேரி 60 ஹெக்டர், நங்கவள்ளி 40 ஹெக்டர், வீரபாண்டி 60 ஹெக்டர், பனமரத்துப்பட்டி 40 ஹெக்டர். கொங்கணாபுரம் 60 ஹெக்டர்மற்றும் எடப்பாடி 40 ஹெக்டர் என மொத்தம் 500 ஹெக்டர் பரப்பில் 20 ஹெக்டர் கொண்ட 25 அங்கக விவசாய குழுக்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ள கிராம பஞ்சாயத்துகளில் ஒட்டு மொத்த வேளாண்மை வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடையும் நோக்கில் இக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அங்கக விவசாயம் செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் 20 பேர் குழுவாக சேர்ந்து 20 எக்டேர் பரப்பிற்கு அங்கக விவசாய குழுக்களை அமைத்து இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு முழுமையாக தங்களது விளைநிலங்களை அங்கக விவசாய நடைமுறைக்கு மாற்றும் வகையில் 3 ஆண்டுகளுக்கு விவசாயிகள் பயிற்சி, கண்டுணர் சுற்றுலா, அங்கக விவசாய இடுபொருட்கள். அங்கக சான்றளிப்பு நடைமுறைகள் மூலம் மதிப்பு கூட்டி விற்பனை செய்தல் தொடர்பாக தொழில்நுட்பங்களும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

முதலாம் ஆண்டில் தேர்வு செய்யப்படும் 20 ஹெக்டர் அங்கக விவசாய குழுவிற்கு பயிற்சி மற்றும் ஏற்கனவே அங்கக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் வயலை பார்வையிட்டு வர ரூ.20 ஆயிரம் குழு வீதம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மேலும் அங்கக முறையில் விவசாயம் செய்வதை உறுதி செய்திடும் வகையில் நிலம்பண்படுத்துதல், அங்கக விதைகள் கொள்முதல், உயிர் உரங்கள், திரவ உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், உயிர் உரங்கள், திரவ உயிரி அங்கக இடுபொருட்களான பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மற்றும் வேம்பு சார்ந்த அங்கக பூச்சி கொல்லிகள் போன்ற இடுபொருட்களுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.12 ஆயிரம் எக்டேர் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் விவசாயம் செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் இணைவழியில் பதிவு செய்ய இயலாத விவசாயிகள் நில உரிமை ஆவணம், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம்- மத்திய அரசு அறிவிப்பு

என்ன ரெடியா? 17 மாவட்டங்களை மிரட்ட காத்திருக்கும் அடைமழை

English Summary: Collector's important announcement to Salem district farmers Published on: 21 August 2023, 05:33 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.