நாகப்பட்டினம் மாவட்டத்தினை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு தாட்கோ மூலம் 100 சதவீத வேலை வாய்ப்புடன் கூடிய அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் பயிற்சி முடித்தவர்கள் சுயத்தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் (Maha Family Salon and Spa International Training Academy) மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology and Hair Dressing) தாட்கோ சார்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படித்திட பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) முழுமையாக தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சியினை முடிக்கும் மாணாக்கர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டினால் (NSDI-National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி பெற்றவர்கள் 100 சதவீத வேலை வாய்ப்பு பெறும் வகையில் தனியார் அழகு நிலையங்களில் (Gayathri Hair and Skin Salon, RKS Beauty Parlour, Natural and Body Craft) பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம். மற்றும் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 இலட்சம் மானியத்துடன் கூடிய 10 லட்சம் வரையிலான கடனுதவி வழங்கப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் தாட்கோ இணைய தள ( www.tahdco.com ) முகவரியில் விண்ணப்பிக்கவும்.
கூடுதல் விவரம் தேவைப்படுவோர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும், 04365-250305 என்ற தொலைபேசியிலும் மற்றும் 9445029466 என்ற கைப்பேசியிலும் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
ஒரு லட்சம் பரிசு- பசுமை சாம்பியன் விருது பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Share your comments