தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024- ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் பெற்று விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
50 சதவீதம் வரை மானியம்:
தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக முதலமைச்சர் அவர்களால் 5000 பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் 2023-2024- ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 118 கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவர் டில்லர் அல்லது களை எடுக்கும் கருவிகள் ஒரு கிராம ஊராட்சிக்கு 2 மட்டும் மானியத்தில் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சிறு குறு பெண் விவசாயிகள், 50 சதவீத மானியமும், இதர ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது.
உழவன் செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம்:
பவர் டில்லர் மற்றும் களையெடுக்கும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி வழியாக "வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு" "மானியத் திட்டங்கள்”, "மானியங்கள்” மூலம் உள் சென்று மானியத்திற்கு விண்ணப்பத்திடலாம்.
மானியத்திற்கு விண்ணப்பித்திட விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், புகைப்படம், ஆதார் நகல், சிறு குறு விவசாயி சான்றிதழ் மற்றும் வகுப்புச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
ஆதி திராவிட பிரிவினருக்கு கூடுதல் மானியம்:
பவர்டில்லருக்கு அதிகபட்சமாக ரூ.85,000/- மானியமும், களையெடுக்கும் கருவிக்கு ரூ.35,000/- மானியமும் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட பிரிவு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியத் தொகை வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவிசெயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவிசெயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் 612 103 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை - 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., தெரிவித்து உள்ளார்.
மேலும் காண்க:
யார் பொய் சொல்றா? செந்தில்பாலாஜிக்கு நாளை ஆப்ரேஷன்- மா.சு தகவல்
Share your comments