Solar Pump Set: 70% மானியத்தில் பம்பு செட் திட்டம் - ஆதிதிராவிட & பழங்குடியின விவசாயிகளுக்கு அரசு அழைப்பு!

Daisy Rose Mary
Daisy Rose Mary
மானியத்தில் பம்பு செட்டுகள்
image credit: India mart

70 சதவீத மானியத்தில் நிறுவப்பட்டு வரும் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் அதிக அளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


70 சதவீத மானியத்தில் சூரியசக்தி பம்பு செட்டுகள்

நமது மாநிலத்தில் தாராளமாக கிடைக்கும் சூரியஒளியை பல்வேறு வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தும் முறைகளை விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு சீரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மின் இணைப்பு இல்லாமலேயே, சூரியசக்தி பம்பு செட்டு (Solar pump set) மூலம் பகலில் சுமார் 8 மணிநேரம் தடையில்லாமல் பாசனத்திற்கு மின்சாரம் பெறமுடியும்.

தமிழ்நாடு அரசு 2013-14 ஆம் ஆண்டு முதல் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு மானியத்தில் (Solar pump set at subsidy) நிறுவிவரும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை, 4,826 விவசாயிகளின் வயல்களில் சூரியசக்தி மோட்டார் பம்புசெட்டுகள் நிறுவப்பட்டு பயனடைந்துள்ளனர்


ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை


இந்நிலையில், நடப்பு 2020- 2021 ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் (PM-KUSUM) திட்டத்தின் கீழ், முதற் கட்டமாக 1,085 விவசாயிகளின் வயல்களில் சூரியசக்தி பம்புசெட்டுகள்அமைப்பதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை தந்து, 511 பம்புசெட்டுகளுக்கு ரூ.12.83 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பம்புசெட்டின் மொத்தத் தொகையில் அரசு வழங்கும் 70 சதவிகிதம் தவிர, மீதமுள்ள 30 சதவீதத் தொகையினை விவசாயிகள் தங்களின் பங்களிப்பாக வழங்கவேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையிலான AC மற்றும் DC மோட்டார் நீர்மூழ்கி பம்புசெட்டுகள் மற்றும் தரைமட்டத்தில் அமைக்கும் மோனோ பிளாக் பம்புசெட்டுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.

Solar pumps at subsidy rate
Image credit: India mart

நீர்மூழ்கி சூரியசக்தி பம்புசெட்டுகளின் விலைவிபரம்

பம்பு விபரம்

மொத்த விலை (ரூ)

விவசாயிகளின் பங்களிப்பு (ரூ)

5 hp AC

ரூ. 2,37,947/-

ரூ. 71,384/-

5 hp DC

 

ரூ. 2,42,303/-

ரூ. 72,691/-

7.5 hp AC

 

ரூ. 3,16,899/-

ரூ. 95,070/-

7.5 hp DC

ரூ. 3,49,569/-

ரூ. 1,04,871/-

10hp AC

 

ரூ. 4,37,669/-

ரூ. 1,31,301/-

10hp DC

ரூ. 4,39,629/-

ரூ. 1,31,889/-

 

மொத்த விலை என்பது சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டை நிறுவுவதற்கான செலவு, வரிகள், 5 ஆண்டு பராமரிப்பு மற்றும் காப்பீடு செலவுகளை உள்ளடக்கியதாகும்.

இதுவரை இலவச மின் இணைப்பு இல்லாத நீர் ஆதாரங்களுக்கு கீழ்க்கண்ட நிபந்தனையுடன் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டிற்கு இத்திட்டத்தின் கீழ், 70 சதவீத மானியம் வழங்கப்பகிறது.

  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) மூலம் இலவச மின் இணைப்புக் கோரி ஏற்கெனவே விவசாயிகள் விண்ணப்பித்திருந்தால், அவர்களுடைய மூதுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை (normal priority)வரும்பொழுது, சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சக்தியை அரசு மின்கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தை வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வழங்கவேண்டும்.

  • இதுவரை இலவச மின் இணைப்புக் கோரி விண்ணப்பிக்காத விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ், 70 சதவிகித மானியத்தில் சூரியசக்தி பம்புசெட்டினை பயன்பெற விரும்பினால், இலவச மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவுசெய்ய வேண்டிய அவசியமில்லை.இத்திட்டத்தின்கீழ் நிறுவப்படும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை அரசு மின்கட்டமைப்புடன் இனிவரும் காலங்களில் இணைத்திட விரும்பினால், விவசாயிகள் இலவச மின் இணைப்புக் கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  • பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தி பம்புசெட்டுகளை அமைத்திட விரும்பும் விவசாயிகள், விண்ணப்பம் அளிக்கும் பொழுது, சூரிய சக்தி பம்புசெட்டுகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்து பாசனம் மேற்கொள்வதற்கான உறுதிமொழியையும் அளித்திடவேண்டும்.

  • ஆற்றுப்படுகை மற்றும் நீர் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள்ளும், காரை இடப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள்ளும், நிலத்தடிநீரை இறைக்க வேண்டுமானால் பொதுப்பணித்துறையிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்று, சூரியசக்தி பம்புசெட்டு அமைக்கும் விண்ணப்பத்துடன் இணைத்திடவேண்டும்.

    Related link 

    விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கும் அரசு!

அணுகவேண்டிய அலுவலகம்

  • சூரியசக்தி பம்புசெட்டுகளுக்கு நமது மாநில விவசாயிகளிடையே அதிக வரவேற்பு உள்ளது. இருப்பினும், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ள சூரியசக்தி பம்புசெட்டு இலக்குகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.எனவே, சூரியசக்தி பம்புசெட்டு நிறுவவிரும்பும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை வருவாய் கோட்டஉதவிசெயற்பொறியாளர் (அல்லது) மாவட்ட செயற்பொறியாளர், அலுவலகங்களை தொடர்புகொண்டு, விண்ணப்பித்து பயன் பெறுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

  • விவரங்களுக்கு, வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமையகத்தினை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 044-29515322, 29515422, 29510822, 29510922

  •  மின்னஞ்சல் aedcewrm@gmail.com மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

    Read This 

    விவசாயிகளுக்கு உதவும் மத்திய-மாநில அரசுகளின் நல திட்டங்கள்!

    அரசு மானியத்தில் சூரிய கூடார உலர்த்தி - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Government Demands Farmers make use of solar-powered motor pump sets being installed at a 70 percent subsidy Published on: 23 July 2020, 10:27 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.