மதுரையில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மதுரைக் கோட்டம் சாா்பில் ராஜாக்கூா் (பகுதி 2), கரடிக்கல், தோப்பூா் ஆகிய இடங்களில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மொத்தம் 2,024 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீா்நிலை புறம்போக்கு பகுதிகளில் குடியிருப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நகா்ப்புற வீடற்ற ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என குறிப்பிடப்படுகிறது. விண்ணப்பதாரா் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினா்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடு அல்லது வீட்டுமனை இருக்கக் கூடாது என்பது கட்டாயமாகும்.
மாத வருமானம் ரூ. 25 ஆயிரத்துக்குள் இருத்தல் வேண்டும். ஒதுக்கீடு பெறும் பயனாளியின் பங்களிப்புத் தொகையைச் செலுத்துவதற்கான சம்மதக் கடிதம், முன் பணமாக ரூ. 10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்திடல் வேண்டும்.
IT ஊழியர்களே உஷார்... TCS, Accenture, HCL போன்ற நிறுவனங்களின் அதிரடி முடிவு!
ராஜாக்கூா் திட்டப் பகுதிக்கு ரூ. 1.42 லட்சம், கரடிக்கல் பகுதிக்கு ரூ. 1 லட்சம், தோப்பூருக்கு ரூ. 50 ஆயிரம் என பயனாளிகள் பங்குத் தொகை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் குடியிருப்பு வேண்டுவோா் விண்ணப்பிக்க ஜூலை 20 முதல் 23 ஆம் தேதி வரை மதுரை கே.கே. நகரில் உள்ள நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாகப் பொறியாளா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
அரிசி, பருப்புக்கு 5% GST வரி அமல் படுத்தமாட்டோம்: அமைச்சர் நம்பிக்கை
Share your comments