நீர் இன்றி அமையாது இவ்வுலகம் எனபது போல நீரே அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆகும். தாவரங்கள், விலங்குகள், மனிதன் என அனைத்து உயிர்களுக்கும் நீரே பிராதான அடிப்படை. இத்தகைய நீரை நாம் , பயிர்செய்யும் பயிர்களுக்கும் சரிவரக் கிடைக்குமாறு செய்தல் என்பது நம் தலையாய பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை.
பயிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் அவற்றிற்கு தேவையான நீர், ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உரங்கள், செழிப்பான மண் ஆகியன தேவை. இவற்றில் மிக முக்கிய தேவை என்பது நீர்தான். அத்தகைய நீரை சொட்டுநீராகப் பயிர்களுக்குக் கொடுப்பதன் மூலம் செழிப்பான அறுவடையை நாம் பார்க்கலாம். அதிக லாபமும் ஈட்டலாம். இந்த நிலையில் சொட்டுநீர் பாசன வசதியை அரசே மானியத்துடன் வழங்குகிறது. அந்த மானியத்தை எவ்வாறு பெறுவது என்பதைக் குறித்துதான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
சொட்டுநீர் பாசனம் என்றால் என்ன?
தற்போது உள்ள காலநிலை மாற்றங்களால் மழையின் அளவு குறைந்து வெய்யிலின் அளவு அதிகரித்தூவிட்டது. இதன் காரணமாக நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது. இந்த சூழலில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, சேமித்து வைப்பது என்பது மிக முக்கிய செயலாக இருக்கிறது. அதோடு, நீரைத் தேக்கி வைக்கும்போது நீர் ஆவியாகவும் வாய்ப்பு இருப்பதால், நீரானது பயிர்களுக்குச் செல்லாமல் வீணாக செலவழிகிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வாகத் தான் சொட்டுநீர் பாசன முறை அமைந்துள்ளது.
சொட்டுநீர் பாசனத்தில் பயன்படுத்தப்படும் நீர் மண்ணில் ஊடுருவி, குழாய்கள் அல்லது உமிழ்ப்பான்கள் வழியாக நேரடியாக பயிர்களின் வேர்களுக்குச் சொட்டுசொட்டாகச் செல்கிறது. இதன் வழியாக நீர் வீணாதல் குறிக்கப்படுகிறது. அதோடு பயிர்களுக்குத் தேவையான நீரும் சரிவரக் கிடைக்க பெரும் துணையாக இருக்கிறது.
மானியம் பெறத் தேவையான ஆவணங்கள்
1.பாஸ்போர்ட்போட்டோ2
2.பட்டா
3.சிட்டா
4.அடங்கல்
5.நிலவரைபடம்
6.சிறுகுறுவிவசாயி சான்று
7.ஆதார் கார்டு
8.ரேசன் கார்டு
9.தடையின்மைச்சான்று(கூட்டு நிலம் என்றால்)
(குறிப்பு: இவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்)
எப்படி விண்ணப்பிப்பது?
- நுண்ணுயிர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளப் பக்கத்திற்குச் சென்றால் இந்த திட்டத்திற்கு விண்ணபிக்கலாம்.
- இணையதள பக்கத்தின் உள் சென்றவுடன் அதன் இடதுபுறம் உள்ள விவசாயி என்ற தலைப்பைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
- இந்த பகுதியில் புதியதாக விண்ணப்பம் செய்யலாம். அதோடு, முன்னரே செய்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலையையும் அவ்வப்போது சரிபார்க்க முடியும்.
- தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் தகவல்கள் இருக்கும்.
- எந்த விவசாயி பெயரில் விண்ணப்பம் செய்யப்படுகிறதோ, அந்த விவசாயின் குடும்ப அட்டை எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியன கட்டாயம் அவசியம்.
- விண்னப்பித்த பின் விண்ணப்பதாரரின் தொலைபேசிக்கு ‘ஓடிபி’ வரும்.
- அந்த பதிவு எண்ணைப் பதிவு செய்து முழுமையாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.
- உள் நுழைந்த பின் நிலத்தின் சர்வே எண், பயிர்களின் விவரம், நிலத்தின் பரப்பு ஆகியவற்றை முதலில் பதிவு செய்ய வேண்டும்.
- விவரங்களுடன் ஸ்கேன் செய்த சான்றுகளையும் இணைக்க வேண்டும்.
- இவ்வாறு பதிவு செய்தவுடன் மானியத்தொகை குறித்த முழு விவரங்கள் விண்ணப்பதாரரின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக வந்துவிடும்.
இணையதளம்: tnhorticulture.tn.gov.in
குத்தகை விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேலும் அதிக தகவல் தேவைப்படின் அருகில் உள்ல தோட்டக்கலைத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெறலாம்.
மேலும் படிக்க
Share your comments