முதியோர் உதவித் தொகை திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி?

Deiva Bindhiya
Deiva Bindhiya

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு, அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டமாகும். இத் திட்டத்தின் நோக்கம், விண்ணப்பிக்கும் முறை அகியவற்றை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆதரவற்ற முதியோர் குறிப்பிடப்படுவது:

கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகிறார்கள். எனவே, அவ்வாறான முதியோர்கள், இந்த திட்டத்தின் விண்ணப்பித்து பயனடையலாம்.

முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம் (Old Age Pension Allowance Scheme):

அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள், அதாவது மற்றவர்களின் ஆதரவின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் அரசால் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் விவரம் (Application details):

ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள், தாலுகா அலுவலகங்களில், இதற்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். கிடைக்கப் பெற்ற விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச் சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

வயது சான்று (Proof of age):

தமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயது சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயது சான்றிதழ் பெறப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால், தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்படையாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபிக்கப்படுகிறது. ஏனெனில், வயது சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால், வயது நிரம்பாத தகுதியில்லாத பலர் அரசின் இச்சலுகையை பெற வாய்ப்புள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?

இருப்பிட சான்று விவரம் (Domicile proof details):

தமிழ்நாடு அரசு இருப்பிட சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள். வசிக்கும் பகுதியை சேர்ந்த நகர்மன்ற / மாமன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகரமன்றத் தலைவர், மாநகர மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது. (இக்கருத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் இருப்பிடச் சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.)

விண்ணப்பங்கள் ஆய்வு (Review of applications):

இந்த விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்பட்டு, அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.

100 ரூபாய் நாணயமாக அறிமுகம்: ஏன்?

உதவித் தொகை (Subsidy):

கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த உத்தரவிற்கு பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித் தொகை தபால் அலுவலக பணவிடை அதாவது (Money Order) வழியாக அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க:

ஆராய்ச்சி மண் வள அட்டை: இதனால் பலன் என்ன?

India Post: அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: பெண்களுக்கு கட்டணம் இல்லை

English Summary: Old Age Allowance Scheme: How to apply? Published on: 05 May 2022, 02:26 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.