புதுமைப் பெண் திட்டம்: 1ம் வகுப்பு மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு

Deiva Bindhiya
Deiva Bindhiya
Tamil nadu Pudumaipen Scheme: invited to apply through online or through camp

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைபெண் திட்டம் துவங்கப்பட்டது.

இதுவரை, 2,3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள், இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.

தற்போது இவ்வலைதளத்தில் http://www.pudhumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே, இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிவரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.

இம்மாவட்டங்களில் சிறப்பு முகாம் - தேதி

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் (நாகப்பட்டினம், நாமக்கல்) நவம்பர் 18ம் தேதி வரையும் (தஞ்சாவூர், திருப்பூர்) 11ந்தேதி வரையும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

மேலும் படிக்க: தமிழகம்: தோட்டக்கலைப் பயிர் சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க அரசு திட்டங்கள்

இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு மட்டுமே பணம் கிடைக்கும்!

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவிகள் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகளில் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக வங்கி கணக்கை, ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணுடன் கண்டிப்பாக இணைத்திருத்தல் அவசியமாகும்.

விண்ணப்ப படிவத்தில் சந்தேகம்: உதவி தொலைபேசி எண்கள்

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிவரை, காலை 10 மணி முதல் 5 மணி வரை - 9150056809,9150056805, 9150056801 மற்றும் 9150056810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல்படிப்பு/ தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும், இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் 11.11.2022க்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க: 

Post Office: மாணவர்களுக்கு ரூ.6,000 உதவி தொகை கிடைக்கும், விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.12,000!

English Summary: Tamil nadu Pudhumaipenn Scheme: invited to apply through online or through camp Published on: 02 November 2022, 04:37 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.