தமிழக அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெற யாரெல்லாம் தகுதி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

Who is eligible to receive Tamil Nadu Sportsmen's Pension

2023-2024 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இஆப., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

விளையாட்டுத்துறையில் சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெற்று நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள www.sdat.tn.gov.in முகவரி மூலம் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த செய்தியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி,இ.ஆ.ப., தெரிவிக்கையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளாக தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச/தேசிய போட்டிகளில் முதலிடம்/இரண்டாமிடம்/மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம்/ இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க வயது வரம்பு 2023 ஆம் ஆண்டு ஜனவரி (31.01.2023) அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாதம் வருமான ரூ.6,000/-ல் இருந்து ரூ.15,000/-க்குள் இருத்தல் வேண்டும்.

ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் (Veteran/Masters Sports Meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

எனவே காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் மேற்காணும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை இணைய தள முகவரி www.sdat.tn.gov.in -யில் விண்ணப்பித்து பயனடையலாம். விண்ணப்பங்கள் 20.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 19.04.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பின் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களின் கைப்பேசி 7401703481 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்

மேலும் காண்க:

PM கிசான் திட்டத்தில் 42 கோடி முறைகேடு- இறந்த விவசாயி வங்கிக்கணக்கிலும் பணவரவு

பிஎம் கிசான்- உங்களது விவரங்களை ஆன்லைனில் திருத்த 6 STEPS போதுமா?

English Summary: Who is eligible to receive Tamil Nadu Sportsmen's Pension

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.