1. வாழ்வும் நலமும்

எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் 5 தீய பழக்கங்கள்

T. Vigneshwaran
T. Vigneshwaran
5 Bad Habits That Can Harm Bones

நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உங்கள் எலும்புகள் வலுவாக இருப்பது மிகவும் அவசியமானது. வயது அதிகரிக்கும் போது, ​​எலும்புகளில் பலவீனம் ஏற்படுவது இயற்கையானது தான் என்று சுகாதார வல்லுநர்கள் பலர் கூறுகின்றனர், ஆனால் இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களுக்கும் எலும்பு பலவீனம் அடைவது பொதுவாகிவிட்டது. எலும்புகள் பலவீனமாக இருக்கும்போது, ​​உங்கள் அன்றாட பணிகளை பாதிக்கக்கூடும். 

உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை மட்டுமல்லாமல் மோசமான உணவுப் பழக்கம் முறை தொடர்பான சில தீய பழக்கங்களும் எலும்புகள் வலுவிழக்க முக்கிய காரணம் என்று பல சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள்- Habits that are harmful to the bones

மது அருந்துதல்- Alcohol consumption

அதிக மது அல்லது ஆல்கஹால் அருந்துவது எலும்புகளில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர், ஏனெனில் அதிக மது அருந்துவதால், உடலின் கால்சியத்தை கிரகித்துக் கொள்ளும் திறன் குறைந்துவிடும்.

அதிக காபி குடிப்பது- Drinking too much coffee

காபியை அதிகமாக எடுத்துக்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையும். காபியில் காஃபின் அளவு அதிகமாக இருக்கும், இது எலும்புகளில் இருக்கும் கால்சியத்தின் அளவைக் குறைகிறது. எனவே, காபியை குடிக்க  வேண்டும்.

அதிகப்படியான உப்பு உட்கொள்வது- Excess salt intake

அதிக உப்பை உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையக்கூடும், ஏனென்றால் அதிக உப்பு சாப்பிடுவதால், கால்சியம் உடலில் இருந்து சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். இதன் காரணமாக எலும்புகள் மெதுவாக பலவீனமடையத் தொடங்குகின்றன. எனவே நாம் அதிகளவில் உப்பை கட்டுப்பாட்டுடன்  பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிக அளவில் குளிர்பானங்களை அருந்துதல்-Drinking large amounts of soft drinks

குளிர்பானங்களை உட்கொள்வதால் எலும்புகள் பலவீனமடையக்கூடும், ஏனென்றால் குளிர்பானங்களில் சோடா மிக அதிகளவில் உபயோகிக்கப்படுகின்றன. அதிக குளிர்பானத்தை குடிப்பது உங்கள் இரத்தத்தில் கால்சியத்தின் அளவைக் குறைக்கும் மற்றும் பாஸ்பேட்டின் அளவை அதிகரிக்கும், இதன் காரணமாக எலும்புகளுக்கு போதுமான கால்சியம் கிடைக்காது. இது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

புகை பிடித்தல்-Smoking

மாறிவரும் வாழ்க்கை முறையில் புகை பிடிப்பது ஒரு நாகரீகமாக மாறிவிட்டது. ஆனால் இந்த பழக்கம் உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தக்கூடும். புகைபிடித்தல் எலும்பு செல்களை சேதப்படுத்துகிறது, இதன் காரணமாக எலும்புகள் சேதமடைய தொடங்குகின்றன.

மேலும் படிக்க:

மூட்டுவலியில் இருந்து நிவாரணம் பெற சில வீட்டுவைத்தியங்கள்!

Skin Care: தோல் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படும் கள்ளிச் செடி!

English Summary: 5 Bad Habits That Can Harm Bones Published on: 20 October 2021, 03:15 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.