தோசை என்பது மிகவும் அனைவராலும் விரும்பப்படும் தென்னிந்திய உணவு வகையாகும். இது அதன் தனித்துவமான சுவை மற்றும் அவற்றில் மேற்கொள்ள இயலும் பல்வேறு வெரைட்டிக்காகவே தோசைக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தோசை என்பது எளிதில் சமைக்க இயலும், அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாது (மாவு தயாரிப்பு கொஞ்சம் சிரமம் தான்). அதனாலே பலரது காலை மற்றும் இரவு நேர உணவுப்பட்டியில் நீக்க முடியாத இடத்தை தோசை பெற்றுள்ளது.
உளுத்தம்பருப்பு மற்றும் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் தோசையில், புரதம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஆதாரமும் அடங்கியுள்ளது. தோசையில் உங்கள் எடையைக் குறைக்கும் வகையில் சில ஊட்டச்சத்து பொருட்களை சேர்த்து சமைக்கலாம்.
உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் புரதச்சத்து நிறைந்த ரெசிபிகளைச் சேர்க்க விரும்பினால், நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய 5 தோசை ரெசிபிகளை கீழே காணலாம்.
முளைக் கட்டிய பச்சை பயறு தோசை:
பொதுவாக, உங்கள் எடையைக் குறைக்கும் உணவில் முளை பயிர்களை சேர்ப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. அதற்கு மாற்றாக முளை பயிர்களை கொண்டு சுவையான தோசையை செய்ய முயற்சிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தையும், வாய்க்கு சுவையையும் தரும். இந்த தோசை ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் ஆரோக்கியமான காலை உணவுக்கு ஏற்றது.
உடனடி ஓட்ஸ் தோசை:
நீங்கள் பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருக்கும் வேளையில், எளிதாகவும் மற்றும் விரைவாகவும் செய்யக்கூடிய ஒரு தோசை வகை. இது ஒரு உடனடி தோசை செய்முறையாகும், மேலும் மாவு தயாரிக்க உங்களுக்கு ஓட்ஸ், ரவை மற்றும் அரிசி மாவு மட்டுமே தேவை. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும். நான்-ஸ்டிக் பாத்திரத்தில் மாவை பரப்பி, உங்களுக்காக ஒரு மிருதுவான தோசை தயார் செய்யவும்.
பருப்புகள் கலந்த தோசை:
இந்த புரதம் நிறைந்த தோசை பச்சைப்பயறு மற்றும் உளுந்து பருப்பு கலவையில் தயாரிக்கப்படுகிறது. கேரட் மற்றும் பட்டாணி சேர்ப்பதன் மூலம் அதன் ஊட்டச்சத்து மதிப்பினை அதிகரிக்கலாம். இந்த தோசையை 10 நிமிடங்களுக்குள் நீங்கள் தயார் செய்யலாம்.
கம்பு தோசை:
சிறுதானியங்களில் அதிகம் பயிரிடுவது கம்பு தான். இந்த தினை தோசை நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும், மேலும், இதனை தயார் செய்ய 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
கடலை மாவு தோசை:
நீங்கள் ஒரு எளிய செய்முறையைத் தேடுகிறீர்களானால், இந்த கடலை மாவு தோசையை முயற்சிக்க வேண்டும். இந்த தோசையை சில நிமிடங்களில் தயார் செய்யலாம். கடலை மாவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் கீரை, வெங்காயம் போன்ற காய்கறிகளையும், உங்களுக்கு விருப்பமான பிற காய்கறிகளையும் சேர்த்து சமைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
pic courtesy: pexels
மேலும் காண்க:
மீன் தொட்டியில் இந்த மீனெல்லாம் வளர்க்க ஆசைப்படாதீங்க.. அவ்வளவும் ஆபத்து!
Share your comments