உங்கள் சீப்பில் உள்ள கூடுதல் முடியைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? முடி நிபுணர்கள், ஒரு நாளைக்கு 100 முடிகள் வரை உதிர்வது இயற்கையானது எனக் கூறுகின்றனர். ஆனால் அதிகப்படியான முடி உதிர்தல் கவலைக்குரியதுதான். பரம்பரை என்பதும் முடி உதிர்தலுக்கு மிகவும் பொதுவான காரணமாகும். ஆனால் உங்கள் முடி உதிர்வது அலோபீசியா, லூபஸ், தைராய்டு பிரச்சினைகள் போன்ற தீவிரமான சுகாதார நிலைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
மேலும் படிக்க: பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!
நீங்கள் முடி உதிர்தல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, பக்கவிளைவுகள் இல்லாமல் செயல்படும் சிகிச்சையைத் தேடுகிறீர்கள் எனறால், இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்.
1. தேங்காய் மற்றும் தேங்காய்ப்பால்
இவை உங்கள் முடிக்கு பல நன்மைகளைக் தருகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், முடியின் பலத்தை மேம்படுத்துகிறது. இதில் அத்தியாவசிய கொழுப்புகள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் உள்ளன. இது முடி உடைவதைக் குறைக்கிறது. மேலும், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து இது கொண்டுள்ளது. முடி உதிர்வதைத் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் பால் பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெயைச் சிறிது சூடாக்கி, முடியின் வேரில் இருந்து நுனி வரை மசாஜ் செய்யவும்.
ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
அல்லது தேங்காயைத் துருவி அதன் பாலை சிறிது தண்ணீரில் கலந்து பிழியவும்.
இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும், மறுநாள் காலையில் கழுவலாம்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
2. வெங்காய சாறு
வெங்காயம் எனபது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவும் கந்தகத்தின் வளமான மூலமாகும். இதன் சாற்றை உச்சந்தலையில் பயன்படுத்தினால் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதன் சாற்றைப் பிழியவும்.
சாற்றை உங்கள் உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
இப்போது மைல்டான ஷாம்பூவைப் பயன்படுத்திக் கழுவவும். பின்னர், உங்கள் தலைமுடியை காற்றில் உலர வைக்கவும்.
3. பூண்டு
வெங்காயத்தைப் போலவே பூண்டிலும் அதிக கந்தகச் சத்து உள்ளது. இதுவே பாரம்பரிய முடி வளர்ச்சி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
பூண்டின் சில கிராம்புகளை நசுக்கவும்.
அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலவையை சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
அதைச் சிறிது ஆறவைத்து பின் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
நீங்கள் அதை 30 நிமிடங்கள் விட்டுவிட்டு உங்கள் தலைமுடியைக் கழுவலாம்.
இதை வாரத்தில் இரண்டு முறை செய்யவும்.
மேலும் படிக்க: உடல் எடையை சரசரவெனக் குறைக்க உதவும் தோசை! ரெசிபி உள்ளே!!
4. மருதாணி
இது பெரும்பாலும் இயற்கையான கண்டிஷனராகப் பயன்படுத்தப்படுகிறது. மருதாணி உங்கள் தலைமுடியை வேரிலிருந்து வலுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் அதை மற்ற பொருட்களுடன் இணைத்தால், அது ஒரு சிறந்த ஹேர் பேக்கை உருவாக்கலாம்.
ஒரு டின்னில் 250 மில்லி கடுகு எண்ணெயை எடுத்து, அதில் 60 கிராம் கழுவி உலர்த்திய மருதாணி இலைகளைச் சேர்க்கவும்.
இப்போது இலைகள் எரியும் கலவையைக் கொதிக்கவைத்து, பின்னர் எண்ணெயை வடிகட்டவும்.
உங்கள் உச்சந்தலையில் வழக்கமான அடிப்படையில் மசாஜ் செய்து, மீதமுள்ளவற்றைக் காற்று புகாத பாட்டிலில் சேமிக்கவும்.
உலர் மருதாணி பொடியை தயிருடன் கலந்து மற்றொரு மருதாணி பேக் செய்யலாம்.
இதனை உச்சந்தலையிலும் முடியிலும் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் இதைச் சப்பிட்டுவிடாதீர்கள்! அதிர்ச்சி தகவல்!!
5. செம்பருத்தி
ஷூ ஃப்ளவர் என்று அழைக்கப்படும் செம்பருத்தி தலைமுடியை வளர்க்கிறது. முன்கூட்டிய நரையைத் தடுக்கிறது. பொடுகுக்குச் சிகிச்சையளிக்கிறது. அதோடு, முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது.
ஒரு சில செம்பருத்திப் பூக்களுடன் எள் அல்லது தேங்காய் எண்ணெயைக் கலந்து பேஸ்ட் செய்யவும்.
உச்சந்தலையிலும் முடி மீதும் தடவி சில மணி நேரம் விட்டு விடுங்கள்.
மைல்டான ஷாம்பூவைப் பயன்படுத்தி குளிர்ந்த நீரில் கழுவவும்.
6. ஆம்லா அல்லது இந்திய நெல்லிக்காய்
முடி உதிர்வால் அவதிப்படுபவர்களுக்கு நெல்லிக்காய் ஒரு வரம். இது வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. இது ஆரம்ப நிலையில் இருந்தே முடி உதிர்வை மாற்றும்.
நெல்லிக்காய் சாறு அல்லது பொடியைப் பயன்படுத்தி எலுமிச்சை சாறுடன் கலக்கவும்.
இதனை தலையில் தடவி உலர விடவும்.
வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி முடியை அலசவும்.
மேலும் படிக்க: சிறுநீரகக் கற்களை நீக்க இயற்கையான ஐந்து வழிகள்
7. முட்டை
முடி உதிர்வை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் பல பொருட்கள் முட்டையில் உள்ளது. இது கந்தகம், பாஸ்பரஸ், செலினியம், அயோடின், துத்தநாகம் மற்றும் புரதத்தின் வளமான மூலமாகும். இவை அனைத்தும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயில் கலக்கவும்.
பேஸ்ட் போன்று அடித்து, முழு உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும்.
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்னர் குளிர்ந்த நீர் மற்றும் மைல்டான ஷாம்பு கொண்டு முடியை அலசவும்.
தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கும், முடி உதிர்தலைக் குறைப்பதற்கும் முடி பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுவது முக்கியம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி? இன்றே விண்ணப்பியுங்கள்!
தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!
Share your comments