8 Common Mistakes
நமது உடலில் சிறுநீரகங்கள் (Kidneys) மிக முக்கிய பங்கு வகிக்கின்றன, அவை 24/7 வேலை செய்கின்றன. இது உங்கள் இரத்தத்தை சுத்திரிக்கிறது, கழிவுகளை நீக்குகிறது, எலக்ட்ரோலைட்டுகளின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. உங்கள் உடலின் இரத்தம் ஒரு நாளைக்கு 40 முறை உங்கள் சிறுநீரகங்கள் வழியாக செல்கிறது. அதனால்தான் உங்கள் சிறுநீரகங்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் மிக முக்கியம்.
உங்கள் சிறுநீரகங்களுக்கு பெருமளவில் பாதிக்கும் 8 பொதுவான பழக்கங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது:
அதிகப்படியான வலி நிவாரணிகள்: வலி நிவாரணிகள் அதாவது ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID) வலியைக் குறைக்க உதவுகின்றன. ஆனால் அது உங்கள் சிறுநீரகங்களையும் சேதப்படுத்தும். அதனால் நீங்கள் வலி நிவாரணிகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கூடுதல் உப்பை எடுத்துக்கொள்வது: உப்பு அல்லது சோடியம் அதிகம் உள்ள உணவுகள் இரத்த அழுத்த அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் சிறுநீரகத்தையும் பாதிக்கும். அதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும் மற்ற மசாலாப் பொருட்களை சேர்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. உங்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
போதுமான தண்ணீர் குடிக்காதது: தண்ணீர் அதிகம் குடிப்பது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதையும் தடுக்கிறது. சிறுநீரக நோய்களிலிருந்து தப்பிக்க 3-4 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தூக்கமின்மை: தூக்கம் (Sleep) உங்கள் உடலை புத்துயிர் பெற உதவுகிறது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியம். 24 நேரம் வேலை செய்யும் சிறுநீரகத்தின் பணிச்சுமையை ஒருங்கிணைக்க சரியான அளவிலான தூக்கம் பெரிதும் உதவுகிறது
கூடுதல் ஸ்பூன் சர்க்கரை: உணவில் அதிக சர்க்கரை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது உங்கள் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.
புகைபிடிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்: புகைப்பிடிப்பவர்கள் (Smokers) சிறுநீரில் புரதம் இருக்கலாம். இது சிறுநீரக பாதிக்கப்பட்டதன் அறிகுறியாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
ஆல்கஹால்: அதிகப்படியான குடிப்பழக்கம் நாள்பட்ட சிறுநீரக நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பதால் ஆல்கஹாலிலிருந்து , அதாவது மது அருந்துவதிலிருந்து விலகி இருங்கள்.
மேலும் படிக்க
கொரோனா சாதாரண ஜலதோஷ வைரசாக மாறும்: இங்கிலாந்து வல்லுநர் கணிப்பு
Share your comments