1. வாழ்வும் நலமும்

ஏழைகளின் குளுக்கோஸ் இளநீர் - நன்மைகள்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit ; Maalaimalar

இயற்கை, மனிதனுக்கு வழங்கிய நன்கொடைகளில் இளநீருக்கு எப்போதுமே ராஜமரியாதை உண்டு. இதை ஏழைகளின் குளுக்கோஸ் என்று சொல்லும் அளவிற்கு இளநீர், சுவையும் பலனும் அதிகமுள்ள ஒரு பொருளாகும்.

இளநீரில் உள்ள சத்துக்கள் - Nutrients in Tender Coconut

இளநீர் தித்திப்பாக இருக்கும். தாகத்தைத் தணிக்கும். இளநீரில் பிரக்டோஸ், குளுக்கோஸ் என்ற இரண்டு வகையான சர்க்கரைகள் உள்ளன. இது தவிர இளநீரில் பொட்டாசியம், கொழுப்பு, புரதம், கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், கந்தகம், பாஸ்பரஸ், குளோரின், வைட்டமின் சி, பி போன்ற சத்துகள் உள்ளன.

காபி, தேநீரில் இருக்கும் எந்தவிதமான நச்சுப்பொருளும் இளநீரில் இல்லை. இளநீரால் ஜீரணக்கோளாறோ மற்ற வயிற்று உபாதைகளோ ஏற்படுவதில்லை.

சர்க்கரை நோயளிகளின் தோழன் - Diabetics Patients can Drink Tender coconut? 

சர்க்கரை நோயளிகளின் தோழன்” என்றே இளநீரை அழைக்கலாம்.சக்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் ஏற்படும் சர்க்கரை நோயாளிகள், இளநீரைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும். சர்க்கரை நோயாளிகள் எல்லோருக்கும் தாங்கள் இளநீர் சாப்பிடலாமா என்ற பெருத்த சந்தேகம் உண்டு. இந்த சந்தேகம் தேவையற்றது. ஏனெனில், சர்க்கரை நோயைத் தீவிரப்படுத்தும் எந்தவிதமான பொருளும் இளநீரில் கிடையாது.

Credit: Expoters india

வயிறு உபாதைகளுக்கு அதிமருந்து - Cure stomach upset 


மலச்சிக்கல், வாந்தி, பேதி, வயிற்றில் கோளாறுகள், நிமோனியா, அம்மை, மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாக இருப்பது இளநீர்தான். செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள் அடிக்கடி சோடா வாங்கி குடிப்பார்கள். இவர்கள் இளநீர் குடித்தால் ஜீரணம் எளிதில் ஆகும். கோடைக் காலத்தில் தணியாத தாகத்தைத் தணிப்பது இளநீர் மட்டும் தான். வெப்பம் காரணமாக ஏற்படும் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற சிறுநீர் பிரச்சனைகளுக்கு, எளிமையான செலவில்லாத மருந்து இளநீர் தான். வயிற்றில் பூச்சிகள் உள்ளவர்கள் ஒருவாரம் தாராளமாக இளநீரைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் தீரும்.

இதயத்தை வலுப்படுத்தும் இளநீர் - Tender Coconut Strengthen Heart 

இதய நோயாளிகளின் தொல்லைகள் மட்டுப்படுத்தும் சக்தி இளநீரில் உள்ளது. இதய துடிப்புக்கும், இதய தசைகளுக்கும் இளநீர் ஊட்டச்சத்துமிக்க பானமாக விளங்குகின்றது. உடம்பில் அதிகம் உஷ்ணம் உள்ளவர்கள், வெந்தயத்தை இரவு ஊறவைத்து விட்டு பின்னர் காலையில் வெறும் வயிற்றில் அதை தின்ற உடன் இளநீரை குடித்தால், உடல் நல்ல குளிர்ச்சி அடைந்துவிடும்.


மூலிகைகள் இளநீரில் வேகவைக்கும்போதுதான் நமக்கு சிறப்பாக சித்த மருந்துகள் கிடைக்கின்றன. மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிக்கு முதலில் கொடுக்கும் திரவப்பொருள் இளநீர்தான். இளநீருடன் சீரகத்தூள் கலந்து சாப்பிட, ரத்தச்சுழற்சி சீராகும். இளநீருடன் 5 சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து சாப்பிட, உஷ்ண நோய்கள் தீரும்; இரத்தக்குழாய்களில் உண்டாகும் குறைபாடுகள் தீரும்.

இவ்வாறு இளநீர் குறித்த மருத்துவ குறிப்புகளை கூறிக்கொண்டே செல்லாம். தினமும் ஒரு இளநீர் குடிக்க முடியாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று அல்லது இரண்டு இளநீரை எடுத்துக்கொண்டால் உடல்நலம் மேம்படும்.

மேலும் படிக்க..

மாட்டுச் சாணத்தில் அகல் விளக்குகள்! மாசில்லா தீபாவளிக்கு தயார்!

கொழுப்பைக் குறைக்க தினமும் சாப்பிடுங்கள் பிஸ்தா!

 

English Summary: All you want to know about the health benefits of tender coconut Published on: 22 October 2020, 09:49 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.