Amazing spinach to help increase blood production!
இரத்த உற்பத்தி குறைவாக உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் பாலக் கீரையை வேகவைத்து ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இவ்வழிமுறை மிகச் சிறந்த முறையில் பலனளிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இக்கீரையை உண்ணலாம்.
தேவையான பொருட்கள் (Need)
- பாலக் கீரை - ஒரு கட்டு
- மிளகு - தேவையான அளவு
- பூண்டு - 15 பல்
- மஞ்சள் தூள் - சிறிதளவு
செய்முறை (Procedure)
முதலில் தேவையான அளவு பாலக் கீரையை எடுத்து சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை ஒன்றிரண்டாக சிதைத்துக் கொள்ளவும். ஒரு இட்லி பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் பூண்டுப் பல் சேர்த்து நீராவியில் வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் நீராவியில் வேகவைத்த பாலக் கீரையைப் போட்டு நன்கு கலக்கி ஒரு வேளை உணவாக சாப்பிடவும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு :
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
96557 58609, 75503 24609
[email protected]
மேலும் படிக்க
கோடையின் வரப்பிரசாதம் வெள்ளரிக்காய்: சத்துக்களும், பயன்களும்!
Share your comments