Credit: IndiaMART
இந்தக் கலவையை உணவில் சேர்த்தால், உணவு மட்டுமல்ல வீடே மணக்கும். இதன் மணத்தை நுகரும்போதே, அசைவ விருந்து தடாலடியாக யாராகிக் கொண்டிருக்கிறோதோ? என அசைவப் ப்ரியர்களை நினைக்கத் தூண்டும்.
மற்ற மசாலா பொருட்களுக்கு இல்லாத மணமும், சுவையும், இதனைச் சேர்க்கும்போதுதான் பக்கத்து வீட்டாரையும் சுண்டி இழுக்கும்.
பெரும்பாலோரின் ஸ்பிரிட்ஜில், காய்கறி இல்லாத நாட்களிலும், இந்த கலவை மட்டும் இல்லாமல் இருக்காது. அது என்ன? இன்னுமா கண்டுபிடிக்கவில்லை?.
அந்தக் கலவையின் பெயர் இஞ்சி-பூண்டு பேஸ்ட் (Ginger garlic Paste)
Credit: Pinterest
இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சி, பூண்டு இரண்டுமே உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகின்றன.
இஞ்சி பூண்டு விழுதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
குறைந்த இரத்த அழுத்தம் (low Blood Pressure)
உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்வது, இரத்த அழுத்தத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர துணை புரியும். அதாவது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவியாக இருக்கிறது இஞ்சி-பூண்டு விழுது.
செரிமானம் (Digest)
உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சி பூண்டு விழுது, உணவு செரிமானமாக உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்த்தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது. மேலும் ஒமட்டல், வாந்தி போன்றவை வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
வலிகளைப் போக்க (Pain killer)
உங்களுக்கு அடிக்கடி தலைவலி, தசைகளில் வலி போன்றவை உண்டானால், கடைகளில் கிடைக்கும் மருந்துகளை சாப்பிடுவதை விட இஞ்சி, பூண்டு விழுதினை உணவில் சேர்த்து வருவது நல்ல மாற்றத்தை கொடுக்கும். நீண்ட காலமாக மருந்துகளை உட்கொண்டு வந்தால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் இயற்கையாக கிடைக்கும் இஞ்சி பூண்டு விழுதினை உணவில் சேர்ப்பதன் மூலமாக ஒற்றை தலைவலி, பல்வலிகள், முதுகு வலி, தசைகளில் உண்டாகும் வலிகள் போன்றவை குணமாகும்.
ஆஸ்துமா
சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு இஞ்சி பூண்டு விழுது மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. இஞ்சியில் உள்ள ஆன்டிபயோடிக் தன்மை(Anti-biotic), காய்ச்சல் மற்றும் சளியை போக்க உதவுகிறது.
Credit: TIPL
அல்சர்
வயிற்றில் ஏற்படும் அல்சர் நம்மில் பலருக்கு பிரதானப் பிரச்சனையாக உள்ளது.
அவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பவர்கள், இஞ்சி-பூண்டு விழுதை, தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது, அல்சரில் இருந்து விடுபட வழிவகுக்கும்.
புற்றுநோய்
அதேபோல், கேன்சர் எனப்படும் புற்றுநோய் (Cancer) வருவதைத் தடுக்கிறது. இஞ்சி-பூண்டு விழுதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் கட்டிகள் உருவாவதை தடுக்து, புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றன.
செக்ஸ் (Sex)
இஞ்சி பூண்டு விழுது உங்களது உடலுறவு நேரத்தை அதிகரிக்கவும், உடலுறவில் ஈடுபட வலிமையை கொடுக்கவும் உதவுகிறது. இது உடலின் சக்தியை அதிகரிக்கிறது. இஞ்சியில் உள்ள அல்லிசின் இரத்த ஒட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக ஆண்மையை அதிகரிக்கிறது.
வயதான தோற்றம் (Aged)
வெளிப்புற முதுமையைக் குறிக்கும், நரைமுடி, சுருக்கங்கள் விழுந்த சருமம் ஆகியவை முன் கூட்டியே வருவதை தடுக்க இஞ்சி, பூண்டு விழுது உதவுகிறது. இதன் மூலம் இளமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். மேலும் இருதய பாதிப்புகள் போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துணை நிற்கிறது.
நச்சுக்களை வெளியேற்ற
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இஞ்சி, பூண்டு விழுது உதவுகிறது. இதன் மூலம் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுவதுடன், உட்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவும் அடித்தளம் அமைக்கிறது.
மேலும் படிக்க...
கொரோனா காலத்திற்கு ஏற்ற மஞ்சள் மசாலா பால்- எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது!
பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!
Share your comments