தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழங்கால பழமொழி . அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. ஜூஸ் போட்டு அருந்தும் ஒரு அற்புதமான மூலிகை புல் தான் அருகம்புல். இந்த அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இங்கே காணலாம்.
சிறுநீர் பெருக்கி
சிலருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும். அவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்த சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதை தடுத்து சிறுநீரை பெருக்கும்.
வயிற்று பிரச்சினைகள்
வயிற்றில் உள்ள செரிமான அமிலங்களின் சமச்சீரற்ற தன்மையால் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் அஜீரணம் மற்றும் வாய்வு ஏற்படலாம். இந்த குறைபாட்டிலிருந்து விடுபட, நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.
நீரிழிவு நோய்
நீரிழிவு (Diabetes) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை (Sugar) சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்துவது இவர்களின் உடல்நலத்திற்கு நல்லது.
பசி உணர்வு
சிலருக்கு எவ்வளவு உணவை உண்டாலும் பசி அடங்காது . இவர்கள் தினந்தோறும் அருகம்புல் ஜூஸ் அருந்தினால் அதீத பசியை கட்டுப்படுத்தும்.
சுவாச பிரச்சனைகள்
ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்றவை நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு காற்றை சுவாசிக்கும் போது துன்புறுவர். இவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சுவாச பிரச்சினைகள்
ஆஸ்துமா மற்றும் பிராங்கைடிஸ் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்கள் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகின்றனர். அருகம்புல் சாறு குடிப்பதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடை
அவசர வாழ்க்கை முறை மற்றும் கட்டுப்பாடுகளில்லாத உணவு முறைகளால் பலருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் காலை உணவு உண்பதற்கு முன்பு அருகம்புல்ஜூஸ் அருந்தி வந்தால் உடல் பருமன் மற்றும் உடல் எடை குறையும்.
மேலும் படிக்க..
BLACK PAPPER : கருப்பு மிளகில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்.
13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை!
துரத்தித் துரத்தித் தாக்க வருகிறது மஞ்சள் பூஞ்சை- இந்தியாவில் நுழைந்துவிட்டது!
Share your comments