பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கு தெரியாது. மறுபுறம் தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி பப்பாளியில் என்ன நன்மை இருக்கிறது என்று தெரியுமா?
100gm பப்பாளியில் 43 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதில் இருக்கும் சத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது. குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண் பார்வை கோளாறு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பப்பாளியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.இதில் போலிக் ஆசிட் (folic acid) அதிகமாக உள்ளதாள். குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது . பெண்கள் இதை உண்பதால் மாத விலக்கு சீராகும்.
ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும். இப்பழத்தை தினமும் உண்பதால் நரம்பு தளர்ச்சி குறையும். கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய உகந்தது.
காலை உணவில் பப்பாளியை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டால் உடல் கழிவுகளை வெளியேற்றும். மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தீர்க்கும்.
உடல் எடை அதிகரித்து காணப்படுபவர் பப்பாளி பழத்தை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.
4 வாரங்கள் தொடர்ந்து இப்பழத்தை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். இந்த காயை சமைத்து உண்பதாலும் உடல் பருமன் குறையும். அதிகமான பருப்பு உணவை உண்ட பிறகு, இரண்டு பப்பாளித்துண்டுகளச் சாப்பிட்டால், நன்றாக செரிமானமாகி விடும்.
தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீயபக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், வாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்
மேலும் படிக்க..
பப்பாளியினால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?
ஆர்கானிக் முட்டை உற்பத்தி- மூலிகை இலைகள் மூலம் அதிகரிக்கலாம்!
Share your comments