1. வாழ்வும் நலமும்

பப்பாளியினால் ஏற்படும் தீமைகள் தெரியுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Credit : Indiamart

மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிலுமே பப்பாளியின் பங்கு மகத்தானது. பதினெட்டு வகை ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள ஒரே பழம் என்பதால், அது பழங்களின் தேவதை என அழைக்கப்படுகிறது. ம் மலிவான விலையில் கிடைப்பதால், இதனை "ஏழைகளின் கனி" என்றும் கூறுவர்.

பப்பாளியின் நன்மைகள்

  • 100gm பப்பாளியில் 43கலோரிகள் மட்டுமே உள்ளன. மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது.இந்த சத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது.
  • அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.
    பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பே இல்லை.
  • குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண் பார்வை கோளாறு குறையும்.
  • இதில் அதிகளவில் போலிக் ஆசிட்(folic acid) இருப்பதால், குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது . பெண்கள் இதை உண்பதால் மாத விலக்கு சீராகும்.
  • ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும்.
  • தினமும் உண்பதால் நரம்பு தளர்ச்சி குறையும். கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உகந்தது.
  • மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தீர்க்கும். உடல் எடை அதிகரித்து காணப்படுபவர் பப்பாளி பழத்தை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும்.
  • 4 வாரங்கள் தொடர்ந்து இப்பழத்தை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். இந்த காயை சமைத்து உண்பதாலும் உடல் பருமன் குறையும்.பப்பாளி காயை உண்பதால் சிறுநீரில் சர்க்கரை அளவு குறையும்.
  • பப்பாளி பாலில் செரிமானத்துக்கு உதவும் என்சைமான "பப்பாயின்" உள்ளது. இது ப்ரோடீன் உணவைச் செரிக்க வைக்க உதவும்.
Credit : Nice png

பப்பாளியின் தீமைகள்

  • கர்ப்பிணி பெண்கள் முதல் 2 மாதங்கள் இப்பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லது.
    அதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும்.
  • பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால் வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்.
  • இந்தியாவின் பர்ட்யூ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அதிகளவு பெப்பெய்ன் என்சைம் உடலுக்கு சென்றால் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
  • அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் ஒருவித எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்குகிறது.
  • பப்பாளி விதையிலுள்ள"கார்பைன்" என்ற நச்சானது, நாடித்துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தைஏற்படுத்துகிறது.

தகவல்

அக்ரி. சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

குளிருக்கு ஏற்ற இயற்கை குடில்- பாரம்பரிய உணவுகளையும் ருசிக்கலாம் வாங்க!

பாதுகாப்பான வாழ்க்கைக்கு பாரம்பரிய அரிசி வகைகள் !

English Summary: Do you know the harms caused by papaya? Published on: 25 October 2020, 01:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.