கருப்பு மிளகு நமது சமையலறையில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். சில உணவுகளில் மிளகு அப்படியே சேர்த்து மற்றவற்றில் தூள் போடுவதன் மூலம் உணவின் சுவையை அதிகரிக்கிறோம். உணவில் சுவையைச் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், மிளகு பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
ஆயுர்வேதத்தில் மிளகு ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடுகையில் கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி மேலும் அறியலாம்.
இருமல் சளி மற்றும் மூக்கு ஒழுகுவதற்கான தீர்வு
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு ஆகியவற்றை இஞ்சி சாறுடன் (இஞ்சி) எடுத்துக் கொன்டாள் . இதை தேநீரில் கலந்து சாப்பிடலாம்.
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது
ஒரு ஆய்வின்படி, கருப்பு மிளகு புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஏனெனில் இதில் பைபரின் (fiber) என்ற ரசாயனம் உதவுகிறது . மஞ்சளுடன் இதை உட்கொள்வது புற்றுநோயைத் தடுக்கும். இது பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது.
வலி நிவாரணம்
கருப்பு மிளகில் உள்ள பைபரின் அளவு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தசைகளில் ஏற்படும் வலியை தடுக்கிறது. இது மசாஜ் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகை எண்ணெயுடன் கலந்து சூடு படுத்தி, வலி இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் பெறலாம்.
வயிற்றுக்கு நல்லது
கருப்பு மிளகு உட்கொள்வது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இது வயிற்று வலி வாயு மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளையும் நீக்குகிறது.
முகமும் பளபளக்கிறது
இதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால், அது உண்மைதான்! கருப்பு மிளகை வைத்து ஸ்க்ரப்பிங் (scrubbing) செய்தால் , முகத்தில் பிரகாசத்தை அதிகரிக்கும். கருப்பு மிளகு பெரிய துண்டுகளாக நசுக்கி தேனுடன் கலந்து தெய்த்தால் முகம் பளபளக்கும். மேலும், இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் பளபளப்பாகிறது. மிளகு அளவு குறைவாக இருக்க வேண்டும்.
எடையைக் குறைக்க உதவுகிறது
கருப்பு மிளகு நம் உடலில் இருக்கும் கொழுப்பையும் குறைக்கிறது. இது செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது. மேலும் குறுகிய காலத்தில் அதிக கலோரிகளை எரிக்கிறது. மிளகு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க..
மஞ்சளில் இந்த அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளது தெரியுமா உங்களுக்கு?
Share your comments