காலை எழுந்ததும் காஃபி குடிப்பது நம்மில் பலரது பழக்கம். அதுதான் நம்முடைய அன்றாட நடைமுறை. அவ்வாறு அருந்தும் காஃபி, நம் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதை, ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
அதே காஃபி நம் உடல் எடைக்குறைப்புக்கும் உதவும் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். காஃபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் தடுக்கும். பட்டர் காஃபி குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது என்பதுதான் அறிவியல் ரீதியிலான உண்மை. ஆனால், காஃபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்று கூறப்படுவதில் முழுவதும் உண்மை இல்லை.
பட்டர் காஃபி
தேவையான பொருட்கள்:
-
தண்ணீர் - 1 கப்
-
பால் - 1 கப்
-
வெண்ணெய் - 2
-
டீஸ்பூன் காபி தூள் - 2 டீஸ்பூன்
-
உப்பு - சிறிதளவு
செய்முறை:
-
தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
-
கொதிக்க வைத்த தண்ணீரில் காபித்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
-
பின்னர் அதில் நன்றாக கொதிக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.
-
அடுத்து உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அல்லது மிக்சியில்
-
போட்டு இந்த கலவை மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் கலக்க வேண்டும்.
-
காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் வரும் போது எடுத்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.
-
அவ்வளவுதான் உங்கள் பட்டர் காபியை 10 நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.
-
பால் விரும்பாதவர்கள் பால் சேர்க்காமலும் செய்யலாம்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
Share your comments