மோர் என்பது கோடை காலத்திற்கான ஒரு இதமான குளிர் பானம் ஆகும். காலம் காலமாக கோடைகாலத்தில் பருகும் வழக்கமான மற்றும் சத்துள்ள பானமாக இது இருக்கிறது. இந்த குளிர்ந்த மோர் எண்ணற்ற நன்மைகளையும் கொண்டுள்ளது. அதன் பலன் களை இப்பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.
மோர் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. கோடை வெயிலுக்குத் தாகத்தைத் தனித்து உடலின் நீரின் அளவைத் தக்கவைக்கும் பங்கு மோர் இருக்கின்றது. மோர் குடிப்பதால் பல்வேறு நற்பயன்கள் உடலுக்குக் கிடைக்கின்றது. அவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.
சருமத்திற்கு நல்லது: உடலில் சேரும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற மோர் உதவியாக இருக்கிறது. ஆகவே, மோர் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் இருக்கிற நச்சுக்கள் நீங்கிச் சருமம் பொலிவுற உதவுகிறது.
உடல் பருமன் குறைவு: மோரில் புரதச்சத்து அதிக அளவு இருக்கிறது. புரதம் உடலில் சேரும்பொழுது, நம் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைக்க மோர் உதவுகிறது.
உடலைக் குளிர்ச்சியாக வைக்கும்: மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினம் குடித்து வர உடல் மற்றும் சருமத்தில் வறட்சி பிரச்சனைகள் நீங்க உறுதுணையாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: மோரில் இருக்கும் லாக்டிக் அமில பாக்டீரியா ஆன்டிபாடிகளின் உற்பத்தியினை அதிகரிக்க உதவுகிறது. ஆகையால், இது நோயெதிர்ப்பு சக்தியைப் பெரிதும் அதிகரிக்க உதவதாக இருக்கிறது.
கல்லீரலீரலுக்குச் சிறந்தது: அன்றாடம் உண்ணும் உணவில் உள்ள கழிவுகளை போக்கி, உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்கு கொண்டு சேர்க்கும். அதனால், கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும்.
வயிற்றெரிச்சலை குறைக்க உதவுகிறது: மாமிசம், மசாலா பொருட்கள் நிறைந்த கடின உணவுகளை எடுத்துக்கொள்ளும்பொழுது வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற உணவர்வினைக் கட்டுப்படுத்த ஒரு கிளாஸ் மோருடன், இஞ்சி சேர்த்து குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கிறது.
இரத்த போக்கு பிரச்சனைக்கு நல்லது: மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கு இது பெரிதும் உதவுகிறது. மேலும், வயிற்று வலிக்கும் மோர் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கோப்பை மோரில் வெந்தயம் சேர்த்து குடித்து வர இந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
உடல் எடை குறையணுமா? இந்த ஒரு பொருள் சாப்பிடுங்க போதும்!
வீட்டிலேயே தயாரிக்கும் 7 சிறந்த கோடைகால பானங்கள் ரெசிபிகள்
Share your comments