கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லோசான அறிகுறி இருந்தால், சிடி-ஸ்கேனைத் தவிர்ப்பது நல்லது என எய்ம்ஸ் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
சிடி ஸ்கேன் (CD-scan)
கொரோனா வைரஸ் ஒரு நபரைத் தாக்கியதும், அவரது நுரையீரலைத்தான் அதிகமாக பாதிக்கும். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.
பாதிப்பைக் கண்டறிய (To diagnose vulnerability)
இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு, சிடி-ஸ்கேன் எடுக்கப்பட்டு நுரையீரல் மற்றும் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படும்.
தவிக்கும் இந்தியா (Suffering India)
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வருவதால் மருத்துவமனைகளில் நிரம்பியுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அறிகுறி இல்லை ( No symptoms )
அறிகுறியில்லாத கொரோனா வைரஸ் தாக்குதல், லேசான அறிகுறிகளுடன் உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள் உறுப்புகள் பாதிப்பு (Damage to internal organs)
நோயாளிகளும் உள் உறுப்புகளில் பாதிப்பு உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள சிடி-ஸ்கேனை அதிக அளவில் நாடுகின்றனர். பொதுவாக சிடி-ஸ்கேன் உள் உறுப்புகளை தெள்ளத்தெளிவாக படம் பிடிக்கும் என்பதால் பொதுமக்களும் அதற்கு பயப்படுவதில்லை.
மருத்துவர் எச்சரிக்கை (Doctor alert)
இந்த நிலையில் சிடி-ஸ்கேன் மிகவும் ஆபத்தானது என்று எய்ம்ஸ் மருத்துவமனை டைரக்டர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விளைவுகளை ஏற்படுத்தும் (Causing effects)
சிடி-ஸ்கேன் குறித்து டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில் சிடி-ஸ்கேன் மற்றும் பயோமேக்கர்ஸ் ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு லேசான அறிகுறி இருக்கும் என்றால், சிடி-ஸ்கேன் செய்வதால் எந்த லாபமும் இல்லை. ஒருமுறை நீங்கள் சிடி-ஸ்கேன் எடுத்தால் அது 300 மார்பக-எக்ஸ்ரேவிற்கு சமமானது. இது அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
மேலும் படிக்க...
சில மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்! சீரம் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க 8 பள்ளிகள் ஒப்படைப்பு- ஈஷா நடவடிக்கை!
Share your comments