உணவுப் பொருட்களில், அதன் நிறம் மற்றும் நறுமணத்தை அதிகரிக்க உடலுக்கு நன்மை பயக்காதப் பொருட்களைக் கலப்படம் செய்வது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆவின் பாலில் தொடங்கி பிரபல நிறுவனங்களின் தேன் வரை கலப்படம் கொடிக் கட்டிப்பறப்பது ஆய்வில் அம்பலமானது. இதன் தொடர்ச்சியாக தற்போது உணவுப் பொருட்களில் கழுதை மலம் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலப்படம் (Adulteration)
அதாவது மஞ்சள் தூள், மிளகாய்பொடி, கொத்தமல்லி பொடி, கரம் மசாலா பொடி உள்ளிட்டவற்றில், கழுதையின் மலம் மற்றும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் எண்ணெய் கலப்படம் (Adulteration) செய்யப்படுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் இந்த கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்து 300 கிலோ கலப்படப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எனவே மக்களே, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா பொடி ஆகியவற்றை கடைகளில் வாங்கும் போது எச்சரிக்கையாய் இருங்கள். அல்லது நீங்களேத் தயாரித்துப் பயன்படுத்துவதே நல்லது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும்18ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை - பி.ஆர் பாண்டியன்!!
மகசூல் அதிகரிக்க உதவும் தேனீ வளர்ப்பு-ஒரு நாள் சிறப்பு பயிற்சி
மினி பட்ஜெட்டில், மெகா வருமானம் தரும் பெண்களுக்கான தொழில்கள்- முழுவிபரம் உள்ளே!
Share your comments