இரத்தம் உறிஞ்சி, நோயைக் கொடுக்கும் கொசுக்களை ஒழிக்க, சிறந்த வழி எது தெரியுமா? அவற்றை முட்டையிலேயே அழிப்பது தான். அதற்கு தற்போது, நச்சுமிக்க பூச்சிக்கொல்லிகளே பயன்படுகின்றன. இயற்கையாக, மலிவாக, நீடித்த பலன்தரக்கூடிய, எளிய மருந்து ஒன்றை உருவாக்க முடியாதா? முடியும் என கவுஹாத்தி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
செயற்கையான பூச்சிக் கொல்லிகளுக்கு கொசுக்கள் எதிர்ப்பு சக்தியை விரைவில் உண்டாக்கிக்கொள்கின்றன. இந்த இடத்தில் தான் கிராம்பு எண்ணெய் மிகவும் உதவிகரமாக இருப்பதை கவுஹாத்தி விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
கிராம்பு எண்ணெய் (Clove Oil)
கிராம்பு எண்ணெய் கலந்த தண்ணீரில், கொசு முட்டையிட்டால், அது அவற்றை கொன்றுவிடுகிறது. இதற்கு, கிராம்பு எண்ணெயில் உள்ள யூஜினால் என்ற வேதிப்பொருள்தான் காரணம். இத்துடன், கவுஹாத்தி விஞ்ஞானிகள், பிப்பெரோனைல் பியூடாக்சைடு (பி.பி.ஓ.,) என்ற பொருளையும் கலந்தபோது, பெரும்பாலான கொசு முட்டையிலிருந்து வந்த புழுக்கள் கொல்லப்பட்டன.
கொசுத் தொல்லை மிக்க வெப்பப் பிரதேசங்களில் எளிதாக கிடைக்கும் கிராம்பில் இத்தனை மகத்துவம் இருப்பது ஆச்சரியம்தான்.
மேலும் படிக்க
இதைத் தெரிந்து கொண்டால் காய்கறித் தோல்களை இனி வீசியெறிய மாட்டீர்கள்!
வீடுகளில் மீன் வளர்க்க ஆசையா? உதவக் காத்திருக்கிறது பயோ பிளாக் தொழில்நுட்பம்!
Share your comments