1. வாழ்வும் நலமும்

தீவிரம் அடையும் கொரோனா 3-வது அலை- பெங்களூரில் 10 நாளில் 500 குழந்தைகளுக்குத் தொற்று!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொடூரக் கொரோனா (Cruel corona)

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவிட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா-3வது அலை (Corona-3rd wave)

இவ்வேளையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், கொரோனாவின் 3-வது அலை தீவிரம் அடையும் எனவும், குறிப்பாகக் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா (Increasing corona)

இந்நிலையில் கர்நாடகாவில் மீண்டும் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் 1,900 பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கோவிட் 3வது அலையின் தாக்கம் விரைவில் வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

500 குழந்தைகள் (500 children)

இந்நிலையில், பெங்களூருவில் 10 நாட்களில் 500 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெங்களூருவில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும் கடைசி 5 நாட்களில் மட்டும் 263 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் 88 பேரும், 10 முதல் 19 வயதுக்குள் உள்ளவர்கள் 175 பேரும் அடங்கும்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மடங்கு (3 times)

மேலும், அடுத்த சில வாரங்களில் இந்த எண்ணிக்கை இதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

அறிவுறுத்தல்கள் (Instructions)

பெற்றோர்கள் முதலில் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

பிறகு தங்கள் குழந்தைகளை முறையாகக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்து என்ன? (What's next?)

குழந்தைகளுக்கும் அதிவேகமாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதையடுத்து , மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது, பள்ளிகள் திறப்பதை ஒத்திவைப்பது, குடியிருப்புகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து சுகாதார அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!

தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!

English Summary: Corona 3rd wave intensifies - Infection of 500 children in 10 days! Published on: 13 August 2021, 11:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.