செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தக் கட்டணத்தில் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கண்டுபிடிப்பு
உலகளவில் கொரோனா பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதில் முடிவு வருவதற்குப் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.ஹார்மனி கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிற இந்த முறையில், சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகிறது.
இதுபற்றி வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பேரி லூட்ஸ் கூறியதாவது:-
குறைந்தக் கட்டணத்தில் எங்கும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையானதாக இந்த சோதனையை வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணம், உயர் செயல்திறன் கொண்ட இந்த சோதனை உள்நாட்டிலும், உலகமெங்கும் அணுகக்கூடியதாக இருக்கும்.
இந்த சோதனையானது நாசி ஸ்வாப் மாதிரியில் சார்ஸ் கோவ்- ஆர்.என்.ஏ. மரபணு இருப்பதை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். போன்ற முறையைப் பயன்படுத்துகிறது.
20 நிடங்களில் முடிவு (Results in 20 minutes)
ஸ்மார்ட்போன், டிடெக்டரை இயக்கவும், முடிவைத் தெரிந்து கொள்ளவும் இந்த முறை உதவிகரமாக இருக்கும்.ஒரு நிலையான வெப்ப நிலையில் இந்த சோதனை செய்யப்படுகிறது. எனவே இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகிறது. 20 நிமிடங்களில் முடிவை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மிகத் துல்லியம்
இதில் பயன்படுத்தக்கூடிய டிடெக்டர், ஒரே நேரத்தில் 4 மாதிரிகளைச் சோதிக்கும் திறன் கொண்டது. இந்த சோதனை முடிவு மிகத்துல்லியமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க...
இனி முகக்கவசம் வேண்டாம்- கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து!
கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!
Share your comments