1. வாழ்வும் நலமும்

அருகம்புல்- எத்தனை நன்மைகள் ?

KJ Staff
KJ Staff
arugampul

அருகம் புல் என்றாலே நினைவிற்கு வருவது விநாயகர். பசுமையான மெல்லிய நீண்ட கூர்மையான இலைகள். ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் என தென்படும் இடங்களில் வளர்ந்து காணப்படும் இந்த அருகம் புல்லில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

அருகம் புல்லில் உள்ள வேர், இலைகள் உட்பட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அளிக்க வல்லது. 

arugampul juice

மருத்துவ பயன்கள் (Medical Benefits)

* அருகம் புல் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றும். 

* உடல் எடை (கொலஸ்ட்ரால்), சளித் தொல்லை, ஜலதோஷம், இரும்பல், நீர்க்கோவை (உடல் வீக்கம்), வயிற்று வலி, கண்பார்வை கூர்மை, வயிற்றுப்போக்கு  அனைத்திற்கும் சிறந்த மருந்தாகும்.

* ரத்த சோகை, மூக்கில் ரத்த கசிவு, மூளையில் ஏற்படும் ரத்த கசிவு, ரத்த புற்றுநோய் ஆகிய அனைத்து நோய்களும் குணமாகும்.

* சிறுநீர் பையில் உள்ள கல் நீங்க, நரம்பு தளர்ச்சி நீங்க, இதைய கோளாறு குணமாக, தோல் வியாதிகள் குணமாக அருகம் புல் சிறந்த மருந்து.  

arugampul juice

பயன் படுத்தும் முறை (How to use)

  •  அருகம் புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றில் உள்ள நஞ்சுகள் நீங்கும், ரத்தம் சுத்தமாகும், உடல் வீக்கம் குறையும், சிறுநீர் நன்றாக கழியும்.

  • அருகம் புல்லை ஒரு கைப்பிடி அளவு அரைத்து காய வைக்காத 200 மில்லி ஆட்டுப்பாலில் கலந்து தினமும் காலையில் மட்டும் குடித்து வர ரத்த மூலம், நரம்பு தளர்ச்சி குணமாகும்.

  • கொதிக்க வைத்த நீரில் ஒரு துளசி இலையுடன் அருகம் புல்லை சிறிதளவு போட்டு மூடி வைத்து பின் அந்த நீரை குழந்தைகளுக்கு கொடுத்து வர சீதள மற்றும் சளித்தொல்லை நீங்கும்.

  • எலும்பிச்சை பழ அளவு அருகம் புல் பசையை பசுந்தயிரில் கலந்து தினமும் காலையில் குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.

  • * அருகம் புல்லை சிறிதளவு எடுத்து தலையில் வைத்து கட்டிக் கொண்டால்  கபால சூடு தணியும்.

  • * உடல் அரிப்பு குணமாக அருகம் புல்லுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் நன்கு தடவிட வேண்டும். பின் நன்கு காய்ந்த பிறகு குளிக்க வேண்டும்.

  • மனசோர்வு, தூக்கமின்மை, வலிப்பு ஆகியவற்றிற்கு அருகம் புல் சாறு சிறந்த மருந்து.

  • படை, சிரங்கு, ஆறாத ரணங்கள், வறட்டுத்தோல் போன்ற பிரச்சனைகளை நீக்க சம அளவு அருகம் புல் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்  சேர்த்து தேய்த்து வர வேண்டும்.

  • வயிற்றுப் புண் குணமாக 20 மி.லி அருகம் புல் சாறு, 20 மி.லி தண்ணீர் மற்றும் அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து ஒரு மாதம் தொடர்ந்து காலை வேளையில் சாப்பிட்டு வர விரைவில் தீர்வு உண்டாகும்.       

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Cynodon Dactylon! know the awesome health benefits of Scutch grass (Arugampul) Published on: 03 September 2019, 03:40 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.