கொரோனாவை தொடர்ந்து சீனாவில் குரங்கு பி வைரஸ் தாக்கி ஒருவர் பலியானது, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொடூரக் கொரோனா (Cruel corona)
கொரோனா வைரஸ் தொற்றின் கோராத்தாண்டவம் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டு வருகிறது. அனைத்து அரசாங்கங்களும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, மக்களின் உயிர்காக்கப் போராடி வருகின்றன.
அடுத்தடுத்து மரணம் (Successive death)
எவ்வளவுதான் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினாலும், பெரியவர்கள், இளம்வயதினர் என எந்தப் பாகுபாடும் இன்றி, கொத்துக்கொத்தாக அள்ளிச் செல்கிறது கொரோனா வைரஸ்.
உயிர்காக்கும் சிகிச்சை (Life-saving treatment)
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்ககப்படுகின்றன. இதனால் மருத்துவமனைகள் பெரும்பாலும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்களும், செவிலியர்களும் 24 மணி நேரமும் நோயாளிகளைக் காப்பதற்காகப் பாடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர் மரணம் (Doctor death)
கால்நடை மருத்துவர் ஒருவர் 53, இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறு ஆய்வு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த மே மாதம் 27ம் தேதி மரணமடைந்தார்.
மரணத்திற்கு என்ன காரணம்? (What is the cause of death?)
இவரது மரணத்திற்கு என்ன காரணமாக எனக் கண்டறிவதற்காக, பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வெளியான முடிவுகள் வல்லுநர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
குரங்கு பி வைரஸ் (Monkey B virus)
அதாவது இவரது எச்சில், ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் குரங்கு பி வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. குரங்கு பி வைரஸ் தாக்கி ஒருவர் முதல் முறையாக பலியானது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸின் தன்மைகள் (Characteristics of the virus)
இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932ல் கண்டறியப்பட்டது. இது நேரடி கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவும். இதில் இறப்பு சதவீதம்(70--80) அதிகம்.
கூடுதல் பாதுகாப்பு (Extra security)
குரங்கு, மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மரணத்தைப் பரிசளிக்கும் (The gift of death)
மனிதர்களைக் குரங்கு பி வைரஸ் தாக்கும் போது 1--3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும். பின் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க...
ஆகஸ்ட்டில் கொரோனா 3-வது அலை: அடுத்த 100 நாட்கள் அபாயகரமானது!
Share your comments