மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பாதிப்பதுடன், ஒவ்வாமை, அதிக அமில தன்மை சுரப்பு, அஜீரணம், தலைமுடி உதிர்தல், சரும கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
தொற்றுநோய்களைத் தடுக்க
- தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகம். தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும்.
- ஈரப்பதம் காரணமாக உடலுக்கு அதிக நீர்ச்சத்து தேவைப்படும். காய்ச்சி ஆற வைத்த நீரை தேவையான அளவு குடிப்பதோடு, சூடான சூப், ரசம், மூலிகை, இஞ்சி தேநீர் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும்.
- தினசரி உணவில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடென்ட் அதிகளவில் இருக்கும் பழங்களை (Fruits) தினமும் சாப்பிட வேண்டும்.
- பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், கடற்பாசி, பூசணிக்காய், சீமைப் பூசணி ஆகியவை பருவ மழைக்காலத்தில் கிடைக்கும். இவை அனைத்திலும் அதிக அளவில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது, ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் உணவில் அவசியம் சேர்க்க வேண்டும்.
- மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, துளசி, புதினா, எலுமிச்சை ஆகியவற்றில் கிருமி நாசினிகள் (Gems Killer), அழற்சி எதிர்ப்பிகள் இருப்பதால், நோய்கள் வராமல் தடுக்கும். பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகள், பூசணி, வெள்ளரி போன்ற விதைகளை முடிந்த வரை சாப்பிட வேண்டும்.
- ஒமேகா- 3, கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். மீன், இறால், சிப்பி, வாதாம் கொட்டை, பிஸ்தா, ஆளி விதை போன்ற எண்ணெய் விதைகளிலும், ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதய நோய், சில வகை புற்று நோய் (Cancer) வருவதையும் தடுக்கும்.
தவிர்க்க வேண்டியவை
சிட்ரஸ் பழங்களில் அதிகளவில் வைட்டமின் - சி உள்ளது. ஆனால் இப்பழங்களில் புளிப்பு தன்மை இருப்பதால், பருவ மழை காலத்தில் உண்பதை தவிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியுடன் சமரசம் செய்து கொள்கிறோம்.
சிட்ரஸ் பழங்கள் பிடிக்கவில்லை என்றால், உணவு அல்லது வேறு பழச்சாற்றின் மீது கொஞ்சம் எலுமிச்சையை பிழிந்து கொள்ளலாம். பப்பாளி, கொய்யா, குட மிளகாய் ஆகியவற்றிலும் இதே சத்து உள்ளது.
தயிர், மோர், ஊறுகாய் ஆகியவற்றில் புரோ பயாடிக் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
திவ்யா.எஸ்,
உணவியல் நிபுணர்,
சென்னை.
மேலும் படிக்க
புரதச் சத்து நிறைந்த பாதுகாப்பான உணவு பாசிப்பருப்பு!
பாத வெடிப்பு மறைய இப்போதே இதைச் செய்யுங்கள்!
Share your comments