Krishi Jagran Tamil
Menu Close Menu

பிரிஞ்சி இலை பிரியாணியில் சேர்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியுமா?

Thursday, 19 March 2020 05:37 PM , by: KJ Staff
Health Benefits of Bay Leaf

நம் அனைவரும் சமையலில் சேர்க்கும் பிரிஞ்சி அல்லது பிரியாணி இலை நறுமணத்திற்கும், சுவைக்காகவும் தான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. பிரியாணி இலையை உணவில் சேர்ப்பதால், நோய்யெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது. ‘Cinnamomum tamala’ எனும் தாவரத்தின் இலைதான் 'பிரிஞ்சி இலை’ எனப்படுகிறது. இதற்கு தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை போன்று பல பெயர்கள் கொண்டுள்ளது.

நேபாளம், பூடான் மற்றும் இமயமலைச்சாரல்களில் இந்த வகை இலைகள் அதிகளவு பயிரிடப்படுகிறது.  இந்த இலையில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய இந்த இலையை உணவில் சேர்க்கும் பொழுது கிடைக்கும் நன்மைகள் குறித்து அறிந்துக்கொள்வோம் வாருங்கள்..!

Use of bay oil

பிரியாணி இலையின் எண்ணெய்

பிரியாணி இலையில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் உடலில் ஏற்படும் கை, கால் மூட்டு வலிகளுக்கு மருந்தாக அமைகிறது. அதுமட்டுமின்றி,  தலை வலியின் போது, இந்த எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் 1 நிமிடத்தில் வலி குணமாகி விடும்.

தூங்க உதவும் பிரியாணி இலை

நாம் அனைவருக்கும் பிரியாணி சாப்பிட்டவுடன் தூக்கம் வருவது வழக்கம். அதற்கான காரணம் என்ன தெரியுமா? பிரியாணியில் சேர்க்கப்படும் பிரியாணி இலை அதற்கு காரணம். தூக்கமின்மையால் அவதிப்படுபவரா நீங்கள்? அப்படியெனில், தினமும் இரவில் பிரியாணி இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அந்நீரை குடித்தால் நல்ல தூக்கம் வரும். தற்போதுள்ள காலக்கட்டத்தில் தூக்கமின்மை ஓர் பெரும் பிரச்சனையாக நிலவி வருவதால் பக்கவிளைவற்ற இதனை முயற்சி செய்யலாம்.

health benefits of bay leaf tea

பலவித நன்மைகளை பயக்கும் பிரிஞ்சி இலை

 • பெருங்குடலிலும், வயிற்றிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருந்தாக செயல்படும் தன்மை இந்த இலையில் உள்ளது. இதிலுள்ள 'என்சைம்ஸ்' எனும் புரதப்பொருள், உணவை செரிமானம் செய்ய உதவுகிறது.
 • பட்டை இலைகளில் உள்ள 'காஃபிக்' என்ற அமிலமும் 'ரூடின்' என்ற பொருளும் இதயத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்களை வலுவுறச் செய்வதோடு, உடலுக்கு தேவையற்ற கொழுப்பினையும் நீக்க வல்லது.
 • பிரியாணி இலைகள் உடலில் சுரக்கும் இன்சுலினை மேம்படுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதனை உட்கொள்ளுவது நல்லது.
 • இதிலுள்ள 'லினலூல்’ எனும் இரசாயனம் மன அழுத்தத்தை குறைக்கவும், எதிர்க்கவும் உதவுகிறது.
 • பிரிஞ்சி இலையில் 'காஃபிக்' என்கிற அமிலம், க்யூயர்சிடின் மற்றும் யூஜினால் போன்றவை உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்து வெளியேற்றி, புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கிறது.
 • வாந்தி, வாய்ப்புண், நீர்வேட்கை, ஜுரம், சுவாசகாசம், இரைப்பு நோய் போன்றவற்றுக்கு பிரிஞ்சி இலை மிகப்பெரிய தீர்வாக செயல்படுகிறது.
 • பிரியாணி இலையை நீரில் இட்டு காய்ச்சிய நீரை தினமும் ஒரு டம்ளர் பருகினால், சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க உதவி புரிகிறது.
 • இந்நீரை குடிப்பதால் பிரியாணி இலையில் உள்ள சத்துக்கள் மற்றும் கலவைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படாமலும் தடுப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Health Benefits of Bay Leaf Help To Prevent Cancer Beneficial in inflammation Solve constipation problem Bay leaf tea benefits bay leaf benefits in tamil

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

 1. குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை சேமிக்க அழைப்பு
 2. காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை
 3. பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு: தமிழக அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்
 4. விற்பனை செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் முருங்கை காய்கள்
 5. எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது
 6. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டணமின்றி விளைபொருட்களை சேமிக்க அனுமதி
 7. கரோனா பீதியால் கடல் உணவை நாடும் மக்கள்: காசிமேட்டில் மீன் விற்பனை அமோகம்
 8. வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?
 9. 3 வாரங்கள் வெளியில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: பிரதமர் அறிவுப்பு
 10. கரோனா பீதியால் பிராய்லர் கோழி இறைச்சி வீழ்ச்சி: நாட்டுக்கோழிகளுக்கே அதிக மவுசு

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.