Krishi Jagran Tamil
Menu Close Menu

'பழங்களின் ராஜா’என்று அழைக்கப்பட்ட பழம் எது என்று தெரியுமா?

Tuesday, 31 March 2020 11:30 PM , by: KJ Staff
Bael Fruit health Benefits

இலங்கை, இந்தியா, போன்ற ஆசிய நாடுகளில் அதிக அளவில் காணப்படும் இப்பழம் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மண்ணில் இருந்து வருகிறது. நீண்ட வரலாறு கொண்ட வில்வ மரமானது, வில்வை, குசாபி, கூவிளம் போன்ற பல வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. இது சைவ சமய வழிபாட்டில்  முக்கிய பங்கு வகிக்கிறது. சிவபெருமானின் தலவிருட்சமாக வில்வ மரம் விளங்குகிறது. நம்முடைய சாஸ்திரங்கள்,புராணங்கள் என அனைத்தும் இதன் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.

வில்வத்தின் வகைகள்

வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. அவற்றில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் கொண்ட வில்வ மரங்கள் காணப்படுகின்றன. வில்வ இலைகளை கொண்டு சிவனாரைத் தரிசித்தால், முந்தை ஜென்மங்களில் புரித்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். அதே சமயத்தில் வில்வமர நிழல், காற்று ஆகியஅனைத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

Medicinal Value of Beal Fruits

மருத்துவ நன்மைகள்

வில்வ மரத்தின் அனைத்து பாகங்களும் அதீத மருத்துவ குணங்களை கொண்டது. இதன் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு ஆகிய அனைத்தும் பல்வேறு பிணிகளுக்கு மருந்தாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பயன்களையும், பயன்படுத்தும் விதத்தையும் நாம் பார்ப்போம் வாருங்கள்....!

 • வில்வ இலை தொற்று வியாதிகளை நீக்கவல்லது, வேட்டைப் புண்கள், பித்தம் ஆகியவற்றை போக்கும் தன்மையும் இதற்கு உள்ளது.
 • வில்வ பழம் மலமிளக்கியாக செயல்படுகிறது. வில்வ இலைக் கஷாயம் பருகக் கைகால் பிடிப்பு, உடல்வலி முதலியவை குணமாகிவிடும்.
 • இலைச்சாறு ஜலதோஷம், இருமல், ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு நிவர்த்தியளிக்கிறது.
 • இதன் பூ மந்தத்தை போக்கவல்லது. வில்வ காய் பசியை தூண்டிவிடும், மலத்தைக் கட்டும், குடல் கிருமிகளை நீக்கும்.
 • வில்வ இலைச்சாற்றைப் பிழிந்து அத்துடன் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து கொடுக்க சோகை, மஞ்சள் காமாலை தீரும்.
 • மேலும் இந்த சாற்றினை நீர் அல்லது தேன் கலந்து கொடுக்க மூக்கில் நீர் வடிதல் மற்றும் காய்ச்சல் நீங்கும். இலைச்சாற்றுடன் கோமியம் கலந்து  80 லிருந்து 170 மில்லி வீதம் கொடுக்க ரத்தசோகை, வீக்கம் குறையும்.
Helps your Immunity
 • வில்வ வேரைக் கொண்டு செய்யும் வில்வாதித் தைலமானது உடல் உஷ்ணத்தைத் தணிக்கும் தன்மை உடையது.
 • வில்வ மரத்தின் பூவானது வாய் துர்நாற்றத்தைப் போக்கி விஷத்தையும் முறிக்கும் குணம் கொண்டது.
 • வில்வத்தின் இளம் பிஞ்சை அரைத்து 2-6 கிராம் எருமைத்தயிரில் கலந்து கொடுக்க அல்சர், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு நிற்கும். இது குழந்தைகளுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படும் மருந்தாகும்.
 • வில்வ வேரை மருத்துவ முறைப்படி எடுத்துக் கொண்டால் பசியின்மை, சுவையின்மை, பெருங்கழிச்சல், விக்கல், பித்த சுரம், இடைவிடாத வாந்தி, உடல் இளைத்தல் ஆகியவை நீங்கும்.
 • வில்வக்காயுடன் இஞ்சி, சோம்பு சேர்த்து நீர் சேர்த்து காய்ச்சி குடிக்க மூல நோய் கட்டுக்குள் வரும்.
 • வில்வக்காயை பசும்பால் சேர்த்து அரைத்து தலைக்கு தடவி குளிக்க மண்டைச்சூடு, கண்ணெரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும்.
 • வில்வத்தினை காய், இலை, வேர் இவற்றை மணப்பாகு செய்து ஊறுகாய், குடிநீர் என பல வகைகளிலும் உட்கொள்ளலாம்.
 • புரோட்டின், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, உலோகச்சத்து,மாச்சத்து, கலோரி, உள்ளிட்ட பல சத்துக்கள் ஆப்பிள், மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட அதிகம் வில்வ பழத்திலுண்டு என்பது வியப்பான செய்தி என்றாலும் நூறு சதவீதம் உண்மையானது.

பல கொடிய நோய் தாக்குதல்களில் தற்போது நாம் அவதிப்பட்டு வரும் சூழலில் இயற்கை மற்றும் சித்த மருத்துவம் தான் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில், மேற்கண்டவாறு பல இயற்கை மருந்துகளின் பயன்களை தெரிந்து அதனை உட்கொண்டு, உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியினை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்வது அவசியமாகும். நன்றி...

M.Nivetha
nnivi316@gmail.com

Therapeutic Benefits For Skin Medicinal Use of Beal Fruit Health benefits of Wood Apple In Tamil Best Medicine for Diabetes
English Summary: Do you know what all the Therapeutic Benefits of Bael? How Support your Immunity?

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

 1. கேரளாவைப் போல் தமிழகத்தில்லும் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்பு - பலா விவசாயிகள் காத்திருப்பு!
 2. வாழையில் சருகு அழுகல் நோய்: தோட்டக்கலைத்துறை ஆய்வு!
 3. விவசாய கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகள்!
 4. Minmathi App: அரசின் நல திட்டங்கள் குறித்து அறிய "மின்மதி" என்ற புதிய செயலி அறிமுகம்!
 5. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்!
 6. TN Govt: வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க தடை!
 7. தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை: வானிலை மையம்!!
 8. Kharif crops: காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகள் நிர்ணயம்!!
 9. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி சலுகை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
 10. விவசாய தகவல்களை உங்கள் கைகளுக்கு கொண்டு வரும் செயலிகள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.