உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? உடனடியாக இந்த இ-சஞ்சீவனி ஆப்பைப் (app)பயன்படுத்தி மருத்துவரை அணுகலாம்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், திடீரென ஏற்படும் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற, வீடியோ மூலம் வீட்டிற்கே வந்து மருத்துவர்கள் இலவச ஆலோசனை அளிக்கும், மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டம் பெரிதும் கைகொடுக்கிறது.
கொரோனா தொற்று அதிகரிப்பால், கடந்த சில மாதங்களாக காய்ச்சல் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலர், நெஞ்சுவலி வந்ததுபோல் துடிக்கத் தொடங்கியுள்ளனர். அதிலும் சிலர் அச்சத்திலேயே தங்கள் இன்னுயிரையும் பறிகொடுத்துள்ளனர்.
மார்ச் மாதத்தின் இறுதியில், இந்தியாவை கொரோனா பெரிய அளவில் பாதிக்காது என்று நினைத்த நாம், தற்போது அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்துகொண்டே போகிறது.
நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடையாது என்று பல மருத்துவமனைகள் கைவிரித்துவிட்டன.மருத்துவமனைகளின் இந்த நடவடிக்கை மக்களிடையே மேலும் அச்சத்தை வேரூன்ற செய்துள்ளது. சில மருத்துவமனைகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கவும் தவறவில்லை.
மத்திய அரசு முனைப்பு
அதேநேரத்தில் கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு இணையம் மற்றும் செயலிகளை மக்களுக்காக வழங்கி வருகிறது. அதில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக 'ஆரோக்கிய சேது' (Aarogya Setu)இருக்கிறது.
இ-சஞ்சீவனி (E- Sanjeevani)
இந்நிலையில், 2009ல் அரசால் துவங்கப்பட்ட 'இ-சஞ்சீவனி நேஷனல் டெலிகன்சல்டேஷன் சர்வீஸ்'ஸை (E- Sanjeevani Naional Teleconsultaion Service)மக்கள் தற்போது ஆர்வத்துடன் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
சிகிச்சை பெறுவது எப்படி?
கொரோனா ஊரடங்கில் சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல முடியாத சூழலில் மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல துறையின் www.esanjeevaniopd.in இணையதளம், செயலி வழி, ஆன்லைனில் மருத்துவர்கள் வீட்டிற்கே வந்து இலவச ஆலோசனை வழங்குகிறார்கள்.
பேஷன்ட் ரெஜிஸ்ட்ரேஷன்(Patient Registraion)
இந்த இணையதளம் மற்றும் ஆப்-பிற்குள் சென்றவுடன், பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன்(Patient Registraion), பேஷன்ட் லாகின்(Patient Log-in), டாக்டர் லாகின் (Doctor Login)ஆகிய பட்டன்கள் இருக்கும். புதிதாக பதிவு செய்வோர் பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன் பாக்ஸில் கைபேசி எண்ணைக் கொடுத்த பின்னர், அதில் வரும் ஓ.டி.பி.,யை (One Time Passward)பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து, பெயர், முகவரி, மாநிலம், ஊர் போன்ற விபரங்களை கொடுத்த பின் வசிக்கும் பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அவுட் பேஷன்ட் (ஒ.பி.டி) அல்லது ஸ்பெஷாலிட்டி ஓ.பி.டி.,யை கிளிக் செய்து ஏற்கனவே நம் மருத்துவரிடம் பெற்ற 'ஹெல்த் ரெக்கார்டை'(Health Record) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இ-பிரிஸ்கிரிப்ஷன் (E- Priscription)
ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்த பின் மருத்துவரை சந்திக்கும் ஐ.டி., 'டோக்கனை ஜெனரேட்' (Token Generate)செய்ய வேண்டும். நோட்டிஃபிகேஷன்(Notification) வந்ததும் லாகின் செய்து காத்திருக்க வேண்டும். டோக்கன் எண் வரிசை வரும் போது மருத்துவர் வீடியோ மூலம் நம்முடன் இணைவார்.
அவரிடம் நம் உடல்நிலை உட்பட குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து ஆலோசனை பெறலாம். பின் மருந்து, மாத்திரைக்கான சீட்டை மருத்துவர் ஜெனரேட் செய்வார். இ-பிரிஸ்கிரிப்ஷன் பிரிவில் சீட்டை பதிவிறக்கம் செய்து மருந்துக்கடையில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு நலம் பெறலாம்.
தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இந்த திட்டத்தினைப் பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள். இதன்மூலம் மருத்துவரை சந்திக்க முன்கூட்டியே அப்பாயின்ட்மெட் (Appointment) வாங்க நேரில் அலைய வேண்டியது இனி இல்லை. ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்க வேண்டியதும் இல்லை.
கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!
கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!
Share your comments