சில ஆய்வுகள் முட்டை சாப்பிடுவதற்கும் இதய நோய்க்கும் இடையே உள்ள தொடர்பைக் குறித்துக் கூறுகின்றன. பொதுவாக முட்டையுடன் உண்ணப்படும் இறைச்சிப் பொருட்கள், முட்டையை விட இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம் எனக் கூறுகின்றன.
மேலும், முட்டை மற்றும் பிற உணவுகள் தயாரிக்கப்படும் விதம், குறிப்பாக எண்ணெய் அல்லது வெண்ணெயில் வறுக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், முட்டைகளை விட இதய நோய் ஏற்படும் அபாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனத் தகவல் கூறுகிறது.
சராசரியாக ஆரோக்கியமான ஒரு நபர் ஒவ்வொரு வாரமும் ஏழு முட்டைகள் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த நடைமுறை இதய நோய் அபாயத்தை அதிகரிக்காமல் இருக்கும். சில ஆராய்ச்சிகளின்படி, இந்த அளவில் முட்டையை எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் பக்கவாதம், குருட்டுத்தன்மை ஆகியவற்றிற்கு எதிராக நமது உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
இருப்பினும், நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு வாரமும் ஏழு முட்டைகளை சாப்பிட்டால் இதய நோய் வர வாய்ப்பிருக்கிறது என்று மற்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன. மற்றொரு ஆய்வின்படி, முட்டைகளை உட்கொண்டால் நீரிழிவு நோயை உருவாக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் முட்டை, நீரிழிவு மற்றும் இதய நோய் என மூன்றுக்கும் இடையேயான தொடர்பைத் தீர்மானிக்க, கூடுதல் ஆய்வு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம்-க்கும் குறைவான கொலஸ்ட்ராலை உட்கொள்ள நிபுணர்கள் இப்போது பரிந்துரைக்கின்றனர். ஒரு பெரிய முட்டையில் சுமார் 186 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, இவை அனைத்தும் மஞ்சள் கருவில் குவிந்துள்ளது. சில ஆய்வுகளின்படி, உணவில் மற்ற கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால், தினமும் ஒரு முட்டை வரை சாப்பிடுவது நல்ல முடிவு எனக் கூறப்படுகிறது.
உங்களுக்கு முட்டை வேண்டும் ஆனால் கொலஸ்ட்ரால் வேண்டாம் என்றால் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்ணுதல் நல்லது. முட்டையின் வெள்ளைக்கருவில் கொலஸ்ட்ரால் இல்லாவிட்டாலும், புரதச்சத்து உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கொலஸ்ட்ரால் இல்லாத முட்டை மாற்றுகளும் பிரிதொரு தீர்வாக அமையும்.
மேலும் படிக்க
வெள்ளியை ஜொலிக்க வைக்கும் முட்டை ஓடு- யாரும் அறிந்திராத ரகசியங்கள்!
Share your comments