1. வாழ்வும் நலமும்

இதை செய்தால் போதும்-வீட்டில் கொரோனாத் தொற்றுப் பரவாது!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Doing this is enough to prevent corona disease!

Credit: Maalaimalar

காலில் சக்கரம் கட்டி ஓடிக்கொண்டிருந்த நம் வாழ்க்கையை அப்படியேத் தலைகீழாக மாற்றிவிட்டது கொலைகாரக் கொரோனாத் தொற்று நோய்.

துவம்சம் செய்கிறது (Initiates)

ஆரம்பம் முதலே நம்மை அச்சுறுத்திவந்த இந்த நோய், தற்போது தனது 2-வது அலையில், உயிர்க்கொல்லி நோயாக மாறியதுடன், வயது வித்தியாசம் இன்றி, கண்ணில் பட்டோர் அனைவரையும் இழுத்து விழுங்கி துவம்சம் செய்து வருகிறது.

ஆனாலும், நம் வீடுகளில் சில விஷயங்களைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டால், நிச்சயம் இந்தத் தொற்று நோய் பரவாமல் தடுக்க முடியும்.

அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

கதவின் கைப்பிடிகளைத் துடைத்தல் (Wiping the door handles)

வீட்டிற்கு வரும் உறவினர்கள் அந்நியர்கள் என அனைவரின் கைகளும் படும் பகுதியான இதில் அழுக்கும், கிருமிகளும் அதிகம் படிந்திருக்கும். தரையைத் துடைப்பது, கழிப்பறையைச் சுத்தம் செய்வது என்று அன்றாடம் தூய்மைப் பணியை செய்தாலும் கதவின் கைப்பிடிகளைச் சுத்தம் செய்ய பலரும் மறந்விடுகிறோம். கொரோனா நோய் தொற்றினை தவிர்க்கக் கதவின் கைப்பிடிகளைத் தூய்மையாக வைப்பது மிக மிக முக்கியம்.

கிண்ணத்தை தூய்மை செய்தல் (Cleaning the bowl)

வீட்டில் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகள் சாப்பிடுவதற்கு எனத் தனியாகக் கிண்ணம் வைத்திருப்போம். காலையில் வைத்த உணவில் செல்லப்பிராணி சாப்பிட்டது போக மீதமிருப்பதை அற்புறப்படுத்தித் தூய்மை செய்யாமல் சிறிது நேரம் கழித்து சாப்பிடும் என்று மாலை வரை அப்படியே வைத்திருப்போம்.

பாக்டீரியா தொற்று (Bacterial infections)

இதனால் அந்த கிண்ணம் மட்டுமில்லாமல் அதைச் சுற்றியுள்ள இடமும் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும். இதுச் செல்லப்பிராணிக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீங்கை விளைவிக்கும்.

கட்டிங் போர்டு (Cutting board)

  • சில வீடுகளில் சைவம், அசைவம் என இரண்டுக்கும் ஒரே கட்டிங் போர்டை பயன்படுத்துவார்கள். இறைச்சி, மீன் போன்றவற்றை வெட்டியபின் கழுவி வைத்தாலும், அதில் பாக்டீரியா போன்ற கிருமிகள் இருக்கத்தான் செய்யும்.

  • அவை காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டும் போது உணவோடு கலந்து உடலுக்கு கெடுதலை உண்டாக்கும்.

  • எனவே காய்கறிகளுக்கும், இறைச்சிக்கும், தனித்தனியே கட்டிங் போர்டுகள் வைத்திருக்க வேண்டும்.

நான்ஸ்டிக் பாத்திரம் (Nonstick character)

நான்ஸ்டிக் பாத்திரங்கள் (Non-Stick)சமைப்பதற்கு வசதியானவை. இவற்றில் சமைப்பதற்குக் குறைவான அளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதும். அதே சமயம் மிக பழைய நான்ஸ்டிக் பாத்திரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது இதில் இருக்கும் டெப்லான் பூச்சு கொஞ்சம் கொஞ்சாக சமைக்கும் உணவில் கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்று உபாதைகள் ஏற்படும்.

குளிர்சாதன பெட்டி (Refrigerator)

  • முடிந்தவரை வாரம் ஒருமுறை அல்லது மாதம் இரு முறையாவது குளிர்சாதன பெட்டியை சுத்தப்படுத்த வேண்டும். இதனால் அதில் தேவையற்ற கிருமிகள் வளருவதைத் தடுக்க முடியும்.

  • கழற்றிச் சுத்தம் செய்யும் வகையில் உள்ள பாகங்களை நன்கு சோப்பு போட்டுக் கழுவி உலர வைத்தப் பின்னர் மீண்டும் பொருத்த வேண்டும்.

  • வாரம் தோறும் காய்கறி வாங்க செல்வதற்கு முன்புக் குளிர்சாதன பெட்டியில் இருப்பவற்றைச் சுத்தம் செய்த பிறகே புதிய காய்கறிகளை அடுக்க வேண்டும்.

  • இவ்வாறு இன்னும் பல செயல்களை நாம் கவனித்து செய்தால் வீடும், நாமும் தொற்று பாதிப்புகளிலிருந்து தப்பித்துவிடலாம்.

மேலும் படிக்க...

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் வேர்க்கடலை!

இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!

Sprouted Grains: முளை கட்டிய தானியங்களின் பயன்கள்.

 

English Summary: Doing this is enough to prevent corona disease!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.