உடல் பருமனால் அவதிப்படும் பலரும், கொழுப்பைக் (Fat) குறைக்க பல்வேறு வழிமுறைகளை செய்து வருகின்றனர். கொழுப்புச் சத்தைக் குறைக்க, உடற்பயிற்சி செய்வதோடு, பிஸ்தாவை (Pista) தினந்தோறும் உண்டு வரலாம்.
பிஸ்தா-வின் பயன்கள்:
- பிஸ்தா பருப்பில் வைட்டமின் ஏ மற்றும் இ (Vitamin A & E) போன்ற சத்துக்கள் உள்ளதால் இரத்த நாளங்களை பாதுகாக்கும்.
- இரத்தத்தில் ஹீமோகுளோபினை (Hemoglobin) அதிகரித்து, செல்களுக்கு ஆக்ஸிஜனையும் (Oxygen) கொடுக்கிறது.
- பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 (Vitamin B6), இரத்தத்தில் வெள்ளையணுக்களின் (white blood cells) உற்பத்திக்கு மிகவும் அவசியமானது.
- செல்களுக்கு ஆக்ஸிஜனை அளித்து, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 ஆக்ஸிஜனை, ரத்த ஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
- ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊற வைத்து தினமும் மாலையில் சாப்பிட்டால் ஞாபக சக்தி (memory power) அதிகரிக்கும்.
- இதில் உள்ள வைட்டமின் ஈ, புறஊதாக் கதிர்களால் (Ultraviolet rays) தோல் பாதிக்காமலும், தோல் புற்றுநோய் (Skin cancer) வராமலும் தடுக்கிறது.
- பிஸ்தாவில் உள்ள சியாசாந்தின், லூட்டின், கரோட்டினாய்டுகள் (Carotenoids) கண்ணின் விழித்திரையைப் பாதுகாக்கிறது.
- பிஸ்தா சாப்பிடுவதால், உடலில் உள்ள கெட்ட எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்கிறது.
- ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60 சதவீதம் மினரல், பாஸ்பரஸ் சத்து (Phosphorus nutrient) அடங்கியுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
செரிமானத்தைத் தூண்டும் தான்றிக்காய்!
இயற்கை அளித்த வரப்பிரசாதம்!
உணவின் தரத்தை ஆராய நடமாடும் சோதனை கூடம்! உணவு பாதுகாப்பு துறை மதுரைக்கு வழங்கல்!
Share your comments