திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை போன்றவையாகும். திராட்சை பழம், வயிற்றுப்புண், மல்ச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.
திராட்சையின் பயன்கள் (Benefits of Grapes)
இரத்தத்தில் குளுகோஸ் அலவு சீராகி, உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை தடுக்கும். பித்தம் தணியும்.இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். வளரும் குழந்தைகளுக்கு திராட்சை அருமருந்தாகும்.
ஜலதோஷத்தினால் மூக்கில் இருந்து நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திரட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது.
- நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
- இரத்த சோகைக்கும், காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது.
- குடல் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது.
- களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.
- அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றுக்கு திராட்சை சிறந்த மருந்து.
- தினமும் திராட்சை சாரு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.
- பெண்களுக்கு சீரற்ற மாதவிடாயை சீராக மாற்றும்., மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது.
- திராட்சை பழத்தில் பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. எனவே இதை தொடர்ந்து சாப்பிட்டால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.
நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ள திராட்சையை முடிந்த அளவு சாப்பிட்டு வரலாம் இதனால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
மேலும் படிக்க
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா!
Share your comments