கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலை முற்றிலும் சேதப்படுத்தும் ஒரு வகை நிலையாக இருந்து வருகிறது. கல்லீரல் சேதமடையும் போது புரதத்தினைச் சரியாக உறிஞ்சுவது கடினம். இதனால் உடலில் கழிவுப் பொருட்கள் சேர ஆரம்பித்தால் அது மூளையை சேதப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
உடலின் மிக முக்கிய உடல் உள்ளுறுப்பான கல்லீரல் நமது இரத்தத்தில் உள்ள நச்சுகளை உடலில் இருந்து நீக்குவதோடு, நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதலானவற்றைப் பிரித்து உடலில் சேர்க்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யும் கல்லீரலை ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம். கல்லீரல் கொழுப்பு என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்பொழுது ஏற்படும் பாதிப்பு ஆக இருக்கின்றது.
தற்பொழுது இருக்கும் இயல்பு வாழ்க்கை முறையில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை பெருவாரியான மக்கள் எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. கொழுப்பு கல்லீரல் ஒரு ஆபத்தான நிலையாகக் கருதப்படுகிறது. மேலும், இது கல்லீரலை முற்றிலும் சேதப்படுத்துகிறது. இதை தடுப்பதற்குச் சத்து நிறைந்த புரத உணவுகளை (Lean protein) எடுத்துக்கொள்ள வேண்டும். லீன் புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகளைக் குறித்து இப்போது பார்ப்போம்.
இந்த கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கு உதவும் உணவுகளாக கீழ் வருவன இருக்கின்றன.
- சோயாபீன்
- பட்டாணி
- பருப்புவகைகள்
- தானியங்கள்
- முளைகட்டிய பயிர்கள்
சோயாபீன் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்: சோயாவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. சோயாபீன் என்பது ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட ஒரு தாவரமாகக் கருதப்படுகிறது. அதாவது அவை முழுமையான புரதங்களைக் கொண்டு இருக்கின்றன. இதில் 36 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை புரதச்சத்து இருக்கிறது. இதனை உட்கொள்வதால் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையிலிருந்து நலம் பெறலாம்.
பட்டாணி உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்: பட்டாணி என்பது புரதத்தின் மிகப்பெரிய மூலமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் தாமிரம் முதலானவையும் இந்த தானியத்தில் நிறைந்து இருக்கிறது. எனவே, இதை உண்பது உடலுக்கு நன்மை பயக்கும்.
பருப்பு வகைகள் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்: பருப்பில் புரோட்டீனுடன் நார்ச்சத்தும் இருக்கிறது. இது வயிற்றை உணவு உண்ண பிறகு இருப்பது போல் நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். அதோடு, ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றது. இதனால் கல்லீரலில் கொழுப்பு சேர்வது குறைக்கப்படுகிறது. அரை கப் கருப்பு உளுத்தம் பருப்பில் 12 கிராம் புரதம் இருக்கிறது. இதை உணவில் எடுத்துக்கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
தானியங்கள் மற்றும் முளை கட்டிய தானியங்கள் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்: சைவ புரத உணவுகளைப் பெற தானிய வகைகளை உணவில் எடுத்துககொள்ள வேண்டும். இவற்றைச் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் முதலானவையும் கிடைக்கின்றன. எனவே இவை போன்ற உணவுகளை அன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.
மேலும் படிக்க
பால் பிடிக்காதவரா நீங்கள்! அப்போ இதை கூட சேர்த்து குடிச்சி பாருங்க!!
Share your comments