1. வாழ்வும் நலமும்

உடல் பருமனா..? கவலை வேண்டாம்.. ! இந்த பழங்கள் சாப்பிட்டால் போதும்!

KJ Staff
KJ Staff

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில் உங்கள் உடல்நலன்களை கெடுத்துக்கொள்ளாமல், ஆரோக்கியமான பாதையில், வேகமாக உடல் எடையை குறைப்பதற்கு சிலவகை பழங்கள் உதவுகிறது.

அவகோடா

ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ள அவகோடாவில், உயர் அளவில் மோனோசாட்சுரேட் ஒலிக் ஆசிட்(Monounsaturated oleic acid) மற்றும் தண்ணீர் நிறைந்துள்ளது.

மேலும் டெஸ்ட்ரோஸ்டிரான்(Testosterone) ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது, இந்த ஹார்மோன் கொழுப்பினை குறைக்க உதவுகிறது.

தர்பூசணி

தர்பூசணியில், மலச்சிக்கல், தோல் நோய்கள் மற்றும் எடை குறைத்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது, ஏனெனில் இதில் தண்ணீர் மற்றும் இயற்கை முறையிலேயே குறைவான கலோரி உள்ளது.

தினமும் தர்பூசணி பழம் சாப்பிட்டால், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தசைகளில் ஏற்படும வேதனைகளை குறைக்கிறது.

பேரிக்காய்

பேரிக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பசியின்மை பிரச்சனைக்கு தீர்வு தருவதோடு மட்டுமல்லாமல், செரிமானம் சிறந்த முறையில் நடைபெறும், மேலும் எவ்வித உணவுகள் எடுத்தாலும், இதனை சாப்பிடுவதன் மூலம் ஒட்டுமொத்த செரிமானத்திற்கும் உதவுகிறது.

பீச் பழம்

குடலினை சுத்தப்படும் பணியினை செய்யும் பீச் பழத்தில் உள்ள phenolic வயிற்றில் சதைபோடுவதை தடுக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழம் லெப்டின் மற்றும் adiponectin ஹார்மோன் உற்பத்திற்கு உதவுகிறது, இந்த இரு ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்பதோடு மட்டுமல்லாமல் கொழுப்பினையும் எரிக்க உதவுகிறது.

மேலும், இதில் உள்ள anti-inflammatory என்சைம், நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது திசுக்கள் சேதமடைந்துவிட்டால், அதனை குணப்படுத்த உதவுகிறது, மேலும் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில் விட்டமின சி மற்றும் சிட்ரிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது, இது மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், அது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மாதுளம்பழம்

மாதுளம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.

ப்ளாக்பெர்ரி

இதில் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி உள்ளது, இந்த பழத்தினை சாப்பிடுவதால், ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானப்பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி உள்ளது, மேலும் இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதில் உள்ள புரதம் இளமை தோற்றத்தை தடுக்கிறது.

மேலும், நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் உள்ளதால், சருமத்தைன மென்மையாக்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்.

 

English Summary: Fruits that help reduce obesity

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.