கருப்பு பேரழகா, அடி கருப்பு நிறத்தழகி, கருப்புதான் எனக்கு பிடித்த அழகு என்று பீத்தி கொண்டாலும் வெள்ளை தான் அழகு என்பதை வெள்ளைக்காரர்கள் நம்முடைய ஆழ் மனதில் பதிய வைத்து விட்டு சென்று விட்டார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே, அதை அடையவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
தமிழ்நாடு CM Fellowship 2022-24: மாதம் ரூ.50000 வரை பெறலாம்! அறிந்திடுங்கள்!
அதற்கு, ஆதரவளிப்பது போல் பல்வேறு விளம்பரங்களும் மிகைப்படுத்தி காட்டி வருகின்றன. கண்ட.. கண்ட கேமிகல் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்களை காசு கொடுத்து வாங்கி ஏமார்ந்து போவதும் வழக்கமாக உள்ளது. சிலரின் நிறம் வேள்ளை என்றாலும் கால்போக்கில், அவர்களின் நிறம் மாறுகிறது. ஆகவே வெள்ளையாக அல்ல, மாறிய நிறத்தை திரும்பிக் கொண்டு வர பல வழிகள் உள்ளன, அதுவும் வீட்டில் இருக்கும் பொருள் வைத்து. வாருங்கள் பார்க்கலாம்.
எல்லா மளிகை கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்ககூடிய ஈஸியான பொருட்கள் தான், எனவே நிச்சயம் ட்ரை செய்து பாருங்க:
தேவையான பொருட்கள்:
பால்பவுடர் - 1 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1
செய்முறை விளக்கம்:
1. பால் பவுடர், அரிசி மாவு, எலுமிச்சை பழச்சாறு, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் ஊற்றி ஒரு கலவையை உருவாக்கவும்.
2. முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவி துடைத்து கொள்ளவும், வெந்நீர் என்றால் இன்னும் சிறப்பு. அதன் பின்பு இந்த பால் பவுடர் பேக்கை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து கொள்ளவும்.
3. 20 நிமிடங்கள் இந்த பேக் அப்படியே வைத்து இருத்தல் அவசியம். அதன் பின்பு முகத்தை தண்ணீரில் லேசாக தேய்த்து கழுவுக் கொள்ளவும். நீங்களே எதிர்பாராத வகையில் முகம் பொழிவு பெற்றிருக்கும்.
4. இறுதியாக முகத்தை ஐஸ் கியூபை கொண்டு ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் இன்னும் பிரஷ்ஷாக உணர்வீர்கள். முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் அனைத்தும் வெளிவந்து இருக்கும்.வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள், இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் கூடிக்கொண்டே இருக்கும்.
பின் குறிப்பு:
ஒருவேளை உங்களுக்கு எலுமிச்சை பழச்சாறு ஒத்துவராது என்றால் அதை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்பது குறிப்பிடதக்கது. ரோஸ் வாட்டர் கலந்து கொண்டாலே போதுமானது. அரிசி மாவு உங்கள் வீட்டில் இல்லை என்றால் கடலை மாவையும், இந்த கலவையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த செயல்முறையால், உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் வெளியேறி உங்களுடைய முகம் பிரகாசமாக இருப்பதோடு, முகத்தில் இருக்கும் தழும்புகள் படிப்படியாக குறையத் தொடங்கும், என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
தமிழகம்: 10வது பொதுத் தேர்வு நேர அட்டவணை 2022, விவரம் உள்ளே!
Share your comments