1. வாழ்வும் நலமும்

Health: உணவு உட்கொண்ட பிறகு தவிர்க்க வேண்டிய சில பழங்கள்

T. Vigneshwaran
T. Vigneshwaran

Harmful fruits after meals

பெரும்பாலும் நம்மில் பலருக்கு சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடும் பழக்கம் உள்ளது. அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டாக இருந்தாலும் சரி, உணவு உட்கொண்ட பிறகு பழங்கள் சாப்பிடுவது வழக்கமாக  உள்ளது. ஆனால் சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய சில பழங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பழங்களை நீங்கள் சாப்பிட்டால், அவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடும்.

பழங்கள் சாப்பிட சரியான நேரம் காலை என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றன. ஆயுர்வேதமும் அதையே கூறுகிறது. சிட்ரஸ் பழங்கள் தவிர மற்ற பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லது.

உணவுக்குப் பிறகு பழங்கள் உட்கொள்வதைப் பொறுத்தவரை, ஆயுர்வேதம் அதை சரியான பழக்கமாக கருதுவதில்லை. இது  செரிமான அமைப்பையும் பாதிக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இருப்பினும், சாப்பிட்ட பிறகு பழங்கள் உட்கொள்ள கூடாது என்று நவீன அறிவியல் எங்கும் கூறவில்லை.

மாம்பழம்(Mango)

மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு  உட்கொள்ளக்கூடாது. இதில் நிறைய சர்க்கரை இருக்கின்றது.  இது இரத்த சர்க்கரையின் அளவை அத்திபாரிக்கக்கூடும். நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும். மேலும் இது உடலில் சூட்டை ஏற்படுத்தும் காரணத்தால், சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது பின் சாப்பிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வாழைப்பழம்(Banana) உடலில் கலோரி மற்றும் குளுக்கோஸை அதிகரிக்கிறது.

தர்பூசணி(Watermelon) சாப்பிட மதியம் சரியான நேரம் காலமாகும். இரவு உணவிற்குப் பிறகு அதை உட்கொள்ளக்கூடாது.

திராட்சை(Grapes) உடலில் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. திராட்சை சாப்பிடும் போது, சாப்பிட்ட ஒரு மணி நேரம் பின்னோ அல்லது முன்னோ உட்கொள்ள வேண்டும்.

சாத்துக்குடி பழத்தில், குளுக்கோஸ் உள்ளது, ஆற்றலை அளிக்கும் பழம். பிற்பகலில் அதை உட்கொள்ள வேண்டும். இது நீரிழப்பு பிரச்சனையிலிருந்து பாதுகாக்கிறது. வெயிலில் செல்வதற்கு முன்பு சாத்துகுடி உட்கொள்வது நல்ல பலன அளிக்கும்.

ஆரஞ்சு

வைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சுகளை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் அல்லது உணவுக்கு 1 மணி நேரத்திற்குப் பிறகு சாப்பிடுவது நல்லது.

மேலும் படிக்க:

மிகவும் சக்தி வாய்ந்த கொழுப்பை கரைக்கும் பழங்கள்

சர்க்கரை நோயாளிகள் மழைக்காலத்தில் சாப்பிடவேண்டிய பழங்கள் எவை? பட்டியல் இதோ!

English Summary: Health: Some fruits to avoid after eating Meals.

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.