சாதாரணமாக குடிக்கும் பாலில் ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள், அதற்கு மாற்றாக சோயா பால், பாதாம் பால் போன்றவற்றை எடுக்கின்றனர். இதில் பாதாம் பால் பயன்படுத்தி காபி, டீ செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
பாதாம் பால் (Almond Milk)
முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பருப்பை (15) தோல் உரித்துக் கொள்ளவும். பாதாமுடன் ஒரு கப் (200 மி.லி.,) தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இப்போது ஆரோக்கியமான பாதாம் பால் ரெடி. அதை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும்.
பாதாம் பால் டீ (Almond Milk Tea)
ஒரு டம்ளர் டீக்கு முக்கால் பங்கு அளவு இந்த பாதாம் பாலை எடுத்து சுட வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். கால் பங்கு அளவு தண்ணீரில் இரண்டு ஏலக்காய் தட்டிப் போட்டு, டீத்தூள் சேர்த்து டிகாசன் தயாரிக்க வேண்டும். டிகாசன் ரெடியானதும் பாதாம் பாலில் கலக்கி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து வடிகட்டினால் சுவையான டீ ரெடி.
காஃபி (Almond Milk Coffee)
ஒரு டம்ளரில் தேவையான அளவு காபிதூள் எடுத்துக்கொண்டு கொதிக்க வைத்த தண்ணீரை கலக்கவும். இதனுடன் சூடான பாதாம் பால், சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்தால் காபி ரெடி.
பாதாமின் நன்மைகள் (Benefits of Almond)
- செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு பாதாம் பால் குடிப்பதால் பாலின் மூலம் கிடைக்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கிறது.
- நார்ச்சத்து, கால்சியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம் உட்பட பல்வேறு சத்துக்கள் உள்ளன.
- வழக்கமான மாட்டுப் பாலை விட இதில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது.
- உடலில் உள்ள எல்.டி.எல்., என்ற கெட்டக் கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் ரத்தக்குழாயில் கொழுப்பு படிவது தவிர்க்கப்படுகிறது.
- உடலில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது
- ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
- ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைப்பதால் நீரிழிவு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.
- இதில் குறைந்த அளவிலான கலோரிகள் உள்ளதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க
குங்குமப்பூ தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Share your comments