Krishi Jagran Tamil
Menu Close Menu

உணவாகிய விஷம்: உயிரைக்கொல்லும் வெள்ளை சர்க்கரை

Monday, 13 May 2019 03:41 PM

தினமும் உணவு என்ற பெயரில் நம் உடலில் செலுத்திக் கொண்டிருக்கும் விஷம் இந்த வெள்ளை சர்க்கரை. வளர்ச்சி,  கண்டுபிடிப்பு என்று நம் உணவில் விஷத்தை சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கரும்பு சாறிலிருந்து செய்யப்படும் உருண்டை வெள்ளம், நாட்டு சர்க்கரை, ஆச்சு வெள்ளம், இந்த இனிப்புகள் இயற்கையான ஆரோக்கியம் மற்றும் சத்து கொண்டவை. மேலும் எந்த வித பக்க விளைவும் ஏற்படுத்தாத இனிப்பு. கடைசியாக பெறப்படும் தேவையற்ற கழிவானதில்  ரசாயனம்  கலந்து செய்யப்படுவதே  வெள்ளை சர்க்கரை. ஆனால் இந்த தேவையற்ற கழிவானது நம் அன்றாட உணவில் முக்கிய பங்காக இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

காலையில் எழுந்ததும் நாம் குடிக்கும் காப்பி, டீ யிலிருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை வெள்ளை சர்க்கரை ஆட்சி புரிகிறது. வெள்ளை சர்க்கரையில் உள்ள ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து,  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். இதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல,  பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்று நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

வெள்ளை சர்க்கரையில் உள்ள இன்சுலின் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை வளர்ச்சியடைய செய்கிறது.   தினமும் சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் உண்டாவதற்கு இதுவே காரணியாக இருக்கிறது.

இதயத்தின் நாளங்களில் உள்காயங்களை (inflammation)  ஏற்படுத்தி அதனால் மாரடைப்பு, பக்கவாதம் முதலியவற்றை உருவாக்குகிறது. நமது உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரித்து இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதைய நோயை வலுவாக்குகிறது.

நம் ஆரோக்கியத்திற்கும்  நம் தலைமுறையின் ஆரோக்கியத்திற்கும் இன்றிலிருந்து விஷமான இந்த வெள்ளை சர்க்கரையை பயன் படுத்துவதை தவிர்ப்போம். மேலும் உடலுக்கு ஆரோக்கியமான நாட்டு சர்க்கரை, வெள்ளம் போன்றதையே பயன் படுத்துவோம்.

white sugar poisonous white sugar disadvantages toxic
English Summary: is white sugar is poison? reasons and side effects

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. பெண்களுக்காக 50% மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் திட்டம்! - இப்போதே முந்துங்கள்!!
  2. பிரதமரின் விவசாயிகள் ஓய்வுதியத் திட்டதில் சேர என்ன செய்ய வேண்டும்- வழிமுறைகள் உங்களுக்காக!
  3. நீலகிரியில் கொட்டப்போகிறது அதி கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!
  4. கோழியினங்களுக்கான பாரம்பரிய மூலிகை முதலுதவி மருத்துவம்!!
  5. மாட்டுச்சாணத்தைக் காசாக்க நீங்க ரெடியா? இதோ சில வழிமுறைகள்!
  6. மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகளும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்!!
  7. பயிர் பாதுகாப்பு மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்களா? அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!!
  8. விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க விருப்பமா? கடன் வழங்குகிறது இந்தியன் வங்கி!
  9. மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!
  10. அதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் தமிழக அரசின் திட்டம்- விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.