நம் வாழ்க்கையில் ஒருமுறையாவது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து பார்ப்பது அவசியமான ஒன்றாகும். அதிலும் நீரிழிவு நோயாளிகளாக இருக்கும் பட்சத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு பரிசோதனை செய்யும் போதுதான் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த முடியும். ஏனெனில் தங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது, உடல் சுகாதார நிலைமையை நிர்வகிக்க உதவியாக இருக்கும். இதனால் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் சிக்கல்களை எளிதில் தவிர்க்கலாம்.
விரல் நுனி மீட்டர்கள்
உங்கள் விரல் நுனியில் ஊசி குத்துவதன் மூலம் பெறப்படும் இரத்தத்தைப் பயன்படுத்தி உங்கள் இரத்த சர்க்கரை அளவை சோதிக்க பல தொழில்நுட்ப கருவிகள் உள்ளன. ஒரு கூர்மையான சிறிய ஊசி கொடுக்கப்பட்டிருக்கும், அதனை கட்டைவிறலிலோ அல்லது மற்ற விறல்கள் ஒன்றின் நுனியை துளைக்க, இது பயன்படுகிறது. இதன் பெயர் 'லான்செட்' என்று அழைக்கப்படுகிறது. லான்செட்டில் இரத்தத்தை சேமிப்பதற்கு ஒரு மெல்லிய துண்டு கொடுக்கப்பட்டிருக்கும், அதில் ரத்தத்தை சேர்க்க வேண்டும். அதன்பிறகு பதினைந்து வினாடிகளுக்குள் முடிவுகளைக் காண்பிக்கும். அந்த சோதனை மீட்டரில், நீங்கள் முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம். சில நேரங்களில் சோதனை முடிவுகள் இருபது வினாடிகள் ஆகியும் காட்டப்படாமல் இருக்கும் நிலையில் நீங்கள் சோதனையை சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் முழு செயல்முறையையும் மீண்டும் செய்து சரியான முடிவுகளை பெற வேண்டியதாக இருக்கும். மேலும் தற்போது உங்கள் சராசரி இரத்த சர்க்கரை அளவைக் காட்டும் கருவிகளும் மற்றும் உங்கள் கடந்தகால சோதனை முடிவுகளின் விளக்கப்படங்கள் மற்றும் வரைபடங்களைக் காட்டும் மீட்டர்களும் மார்க்கெட்டில் எளிதாகவே கிடைக்கின்றன. உங்கள் தேவைக்கேற்ப உள்ளூர் மருந்தகத்தில் இரத்த சர்க்கரை மீட்டர்களை வாங்கி பயன் அடையாளம்.
இரத்த சர்க்கரை அளவை சோதிக்க மற்ற வழிகள்
தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்பு இது இடைநிலை குளுக்கோஸ் அளவிடும் சாதனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த சாதனங்கள் இன்சுலின் பம்ப்களுடன் இணைக்கப்பட்டு, காலப்போக்கில் உங்கள் முடிவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் வடிவங்களைக் காண்பிக்கும்.
சரியான நேரத்தில் உணவு சாப்பிட்டால் குளுக்கோஸ் அதிகரிப்பை குறைக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு
மற்ற உடல் உறுப்புகளைச் சோதிக்கும் மீட்டர்கள் கட்டைவிரலின் அடிப்பகுதி, மேல் கை, முன்கை மற்றும் தொடை போன்ற பிற உடல் பாகங்களில் இருந்து உங்கள் இரத்த சர்க்கரையை சோதிக்க அனுமதிக்கும் மாற்று விருப்பங்களும் தற்போது வந்துவிட்டன. இரத்த சர்க்கரையை பரிசோதிக்கக்கூடிய பல தளங்கள் உடலில் இருந்தாலும், விரல் நுனியில் இருந்து பெறப்படும் ரத்தத்தை பரிசோதனை செய்வது துல்லியமான முடிவுகளைக் கொடுக்கும். ஏனெனில் இது சின்ன சின்ன மாற்றங்களையும் கண்டறிய உதவும். குறிப்பாக நீங்கள் உணவு அல்லது உடற்பயிற்சி செய்த உடனே ஏற்படும் மாற்றங்களை வெளிப்படுத்தும். எனவே குறைந்த இரத்தச் சர்க்கரைக் உள்ளவர்கள் தங்கள் விரல் நுனியைப் பயன்படுத்தி இரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிப்பது மிகவும் நன்மைபயக்கும்.
உங்கள் இரத்த சர்க்கரை அளவை எப்போது சோதிப்பது நல்லது?
நீரிழிவு நோயாளிகள், தங்கள் சர்க்கரை அளவை ஒரு நாளைக்கு பல முறை சரிபார்க்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். உங்கள் இரத்த சர்க்கரை, இயல்பை விட குறைந்திருப்பதாக தோன்றினால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை சரிபார்ப்பது நல்லது. உணவு, உடற்பயிற்சிகள், வாகனம் ஓட்டுவது, படுக்கைக்குச் செல்வதற்கு முன் என உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
மேலும் படிக்க:
Health: உணவு உட்கொண்ட பிறகு தவிர்க்க வேண்டிய சில பழங்கள்
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு: கடனில் உள்ளதா மின் வாரியம்!
Share your comments