மக்கள் வீட்டில் வைத்திருக்கும் பழங்கள் மற்றும் காயிகரிகளின் விதைகளை எரிந்து விடுகின்றன, மேலும் அவைகள் பயனற்றது என்று நினைத்து விடுகிறார்கள். இன்று பார்க்கப்போகும் இந்த விதைகள் மற்றும் அதில் அடங்கியுள்ள நன்மைகள் உடலுக்கு எத்தகைய ஆரோக்கியத்தை அளிக்கின்றது என்பதை பார்க்கலாம்.
முலாம்பழ விதை
முலாம்பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று, இது கோடை காலத்தில் அதிகமாக பயன்படுத்தக்கூடியது. மக்கள் இதனை ஆராவத்தோடு உண்கின்றனர். நீங்கள் தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டினாள் இதன் விதைகளை பயன் படுத்தலாம் இது உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்தது. விதையின் தோலை நீக்கிவிட்டு பால் அல்லது தண்ணீருடன் சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது நன்கு வறுத்து சாப்பிடலாம். உடலில் ஏற்படும் உஷ்ணத்தை போக்கக்கூடியது. வைட்டமின் "ஏ", இரும்புசத்து, பொட்டாசியம், மற்றும் மினரல்ஸ் அதிகம் காணப்படுகிறது. உடல் சோர்வை போக்கும். சிறுநீர் எரிச்சலை தடுக்கும். வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். குழந்தைகளுக்கு கொடுத்தால் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பூசணிக்காய் விதை
சிலருக்கு பூசணிக்காய் பிடிக்காது, ஆனால் இதன் விதையில் உள்ள பயன் நம் இதயத்திற்கும், சிறுநீரகத்திற்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. உடலில் மெக்னீஷியம் குறைவதை இந்த விதை கட்டுப்படுத்தும். ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6, கொழுப்பு அமிலங்கள் மற்றும் துத்தநாக போன்றவை இதில் உள்ளன. தூக்கம் இன்மை பிரச்சனை இருப்பவர்கள் இந்த விதையை தினமும் உட்கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.
எள்ளு விதை
எள்ளு விதையை பல வகையில் பயன் படுத்தலாம். இது இனிப்பு, பண், பிரட், போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதையில் ' வைட்டமின் ஈ ' இருப்பதால், இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை உற்பத்தி செய்கிறது, இதன் மூலம் நம் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது. இது பெண்களுக்கு மிக சிறந்ததாக அமைகிறது.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளில் இதன் பயன்பாடு மிக சிறந்தது, மெலிதாக இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க இது சிறந்தது, மேலும் முகம் பளபளப்பை அதிகரிக்கிறது.
சியா விதை
மனித உடலுக்கு மிகவும் நன்மையானது. அமினோ அமிலங்கள் கொண்டுள்ளதால் இதில் புரதங்கள் உள்ளன. இது நீரில் நனைத்து நுகரப்படுவதால் பசி வேகமாக உணரப்படாது. உடல் எடையை கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் இது சிறந்த முறையில் உதவும். உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments