Krishi Jagran Tamil
Menu Close Menu

இந்த விதைகள் உங்கள் வாழ்வை மாற்றக்கூடியது

Monday, 08 April 2019 05:03 PM

மக்கள் வீட்டில் வைத்திருக்கும் பழங்கள் மற்றும் காயிகரிகளின் விதைகளை எரிந்து விடுகின்றன, மேலும் அவைகள் பயனற்றது என்று நினைத்து விடுகிறார்கள். இன்று சொல்லப்போகும் விதைகள் மற்றும் அதன் பயன் உடலுக்கு மிக உபயோகமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஆமையும்.

முலாம்பழ விதை

முலாம்பழம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று, இது கோடை காலத்தில் அதிகமாக பயன்படுத்தக்கூடியது. மக்கள் இதனை ஆராவத்தோடு உண்கின்றன. இன்று நாம் இந்த விதைகளின் நன்மைகள்  பற்றி கூற இருக்கினறோம். நீங்கள் தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டினாள் இதன் விதைகளை பயன் படுத்தலாம் இது உடல் எடையை குறைக்க மிகவும் சிறந்தது. விதையின் தோலை நீக்கிவிட்டு பால் அல்லது தண்ணீருடன் சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது  நன்கு வறுத்து  சாப்பிடலாம்.

பூசணிக்காய் விதை

சிலருக்கு பூசணிக்காய் பிடிக்காது ,அனால் இதன் விதையில் உள்ள பயன் நம் இதயத்துக்கும், சிறுநீரகத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.bஉடலில் மெக்னீஷியம் குறைவதை இந்த விதை கட்டுப்படுத்தும்.ஒமேகா 3  மற்றும் ஒமேகா 6 , கொழுப்பு அமிலங்கள் மற்றும் துத்தநாக போன்றவை இதில் உள்ளன. தூக்கம் இன்மை பிரச்சனை இருப்பவர்கள் இந்த விதையை தினமும் உட்கொண்டால் நல்ல பயன் தரும்.

எள்ளு விதை

எள்ளு விதையை பல வகையில் பயன் படுத்தலாம். இது இனிப்பு, பண், பிரட், போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதையில் ' வைட்டமின் ஈ ' இருப்பதால்,  இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை உற்பத்தி செய்கிறது இதன்  மூலம் நம் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது. இது பெண்களுக்கு மிக சிறந்ததாக அமைகிறது.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளில் இதன் பயன்பாடு மிக சிறந்தது, மெலிதாக இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க இது சிறந்தது, மேலும் முகம் பளபளப்பை அதிகரிக்கிறது.

சியா விதை

மனித உடலுக்கு மிகவும் நன்மையானது. அமினோ அமிலங்கள் கொண்டுள்ளதால் இதில் புரதங்கள் உள்ளன. இது நீரில் நனைத்து நுகரப்படுவதால் பசி  வேகமாக உணரப்படாது. உடல் எடையை கட்டுப்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் இது சிறந்த முறையில் உதவும். உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.,

seeds, healthy life, beneficial seeds, organic

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

CopyRight - 2019 Krishi Jagran Media Group. All Rights Reserved.