நாடு முழுவதும் கொரோனா தொற்று, தீவிரமாக பரவி வரும் நிலையில், வீடுகளில் பழங்கள் மற்றும் காய்கறிளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், தும்மினாலோ, இருமினாலோ கூட நோய் பரவும் என்ற எச்சரிக்கை இருப்பதால், நாம் முகக்கவசம், கை உறை உள்ளிட்டவற்றை அணிந்து நோய் பரவாமல் தடுக்க முயற்சித்து வருகிறோம்.
அப்படியானால் நாம் மார்க்கெட்டில் இருந்தோ, தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்தோ வாங்கிவரும் காய்கறிகள் மற்றும் பழங்களில் நோய் கிருமி இருக்குமா?, அவற்றை எவ்வாறு சுத்தம் செய்து என்று சிந்தித்துக் கொண்டிருப்பவரா நீங்கள்?.
உங்களுக்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்.
பரிந்துரைகள் (FSSAI's guidelines)
-
வியாபாரிகளிடம் இருந்து வாங்கி வந்த காய்கறிகள் மற்றும் பழங்களை, அந்த பையுடன் ஒரு இடத்தில் அப்படியே வைத்துவிட வேண்டும்.
-
குளோரின் போடப்பட்ட தண்ணீரில், பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவவேண்டும்.
-
பிறகு சுத்தீரிகரிக்கப்பட்ட குடிநீரில், மீண்டும் சுத்தமாக கழுவுங்கள்.
-
கிருமி நாசினியோ (Disinfectants), சோப்பு(Soap) அல்லது கிளினிங் வைப்ஸ் (Cleaning Wipes) கொண்டோ துடைக்க வேண்டாம்.
-
ஸ்ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் உள்ளே வைத்துவிட்டு, எஞ்சியவற்றை அப்படியே வெளியே 20 முதல் 22 டிகிரி செல்சியஸ் (Room Temperature) வெப்பநிலையில் உலர வைத்துவிடவும்.
-
உணவுப் பொருட்களை வீட்டிற்கு வெளியே காரில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
-
காய்கறிகள் மற்றும் பழங்களைக் கழுவும் சிங்க் (Sink) மற்றும் கழுவும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
-
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை, சுத்தமான தண்ணீர் கொண்டோ அல்லது, ஆல்கஹால் கலந்த திரவத்தைக் கொண்டோ துடைக்க வேண்டும்.
-
இல்லையெனில் சோப் மற்றும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
மேலும் படிக்க..
குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!
தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று! கட்டுக்கடங்காமல் போனால் நிலைமை என்னவாகும்?
சென்னைக்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!
Share your comments